முகப்பு
இந்தியா

சிறுமியை கூட்டு பாலியல் வன்கொடுமை செய்த சிறுவர்கள்!

ஜார்கண்டில், சிறுமியை கூட்டு பாலியல் வன்கொடுமை சிறுவர்களை காவல்துறையினர் தேடி வருகின்றனர்

Updated On : 13 ஜூன், 2024 at 11:46 AM
கோப்புப் படம்
பகிர்:

ஜார்க்கண்டில் சிறுமி ஒருவர் கூட்டு பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டுள்ள சம்பவம் பரபரப்பினை ஏற்படுத்தியுள்ளது.

ஜார்க்கண்டின் தன்பாத் மாவட்டத்தில் ஒரு 14 வயது சிறுமி, தனது மைனர் காதலன் மற்றும் அவரது நண்பர்களால் கூட்டு பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டுள்ளார்.

பாதிக்கப்பட்ட சிறுமி அளித்த புகாரில் தெரிவித்ததாவது, சிறுமியின் காதலன் ஜூன் 9ஆம் தேதியில், அச்சிறுமியை தன்பாத் ரயில் நிலையத்திற்கு அழைத்துச் சென்று, துஹாதண்டில் உள்ள சிறுவனின் வீட்டில், ஒரு நண்பருடன் சேர்ந்து பாலியல் பலாத்காரம் செய்துள்ளான். பின்னர் அச்சிறுமியை, ஒரு அறையில் வைத்து பூட்டியுள்ளனர். மறுநாள் மாலை, அதாவது ஜூன் 10ஆம் தேதியில் வேறு ஐந்து நண்பர்களுடன் வந்து, வீட்டிற்கு அருகிலுள்ள ஒரு புதரில் சிறுமியை பாலியல் வன்கொடுமை செய்துள்ளனர். சிறுவர்களில் ஒருவன் விடியோவும் எடுத்துள்ளான். சிறுமி உதவிக்காக அழும் சத்தத்தினைக் கேட்ட அப்பகுதி மக்கள் சம்பவ இடத்திற்குச் சென்றுள்ளனர். ஆனால் அதற்குள் சிறுவர்களும் தப்பி ஓடிவிட்டனர் எனக் கூறியுள்ளார்.

Advertisement

தகவல் அறிந்தபின், சம்பவ இடத்திற்கு விரைந்து சென்ற காவல்துறையினர் தெரிவித்ததாவது, சிறுவனின் வீட்டில் சோதனை நடத்தியபோது, அங்கு யாரையும் காணவில்லை என்றும், குற்றவாளிகளைத் தேடி வருவதாகவும் கூறினர்.

பாதிக்கப்பட்டச் சிறுமியிடம் நடத்தப்பட்ட விசாரணையில், சிறுமியின் பெற்றோர் இறந்துவிட்டதாகவும், தனது இளைய சகோதரி பிகாரில் தனது மாமாவுடன் வசித்து வருவதாகவும் கூறியுள்ளார். இருப்பினும், குடும்பத்தினரின் இருப்பிடத்தை அறிய முயற்சி செய்து வருவதாகக் காவல்துறையினர் கூறினர்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

கருத்துகள், எதிர்வினைகள் மற்றும் பகிர்வு

View share bar
Show reactions
View quiz
Show comments