இந்தியா

ம.பி.யில் ரூ. 14½ கோடி பணம், வெள்ளி பறிமுதல்

மத்தியப் பிரதேசத்தில் வீட்டில் உரிய ஆவணங்கள் இன்றி பதுக்கி வைத்திருந்த ரூ.14½ கோடி மதிப்பிலான பணத்தை காவல்துறையினர் பறிமுதல் செய்தனர்.

DIN

மத்தியப் பிரதேசத்தில் உரிய ஆவணங்கள் இன்றி பதுக்கி வைத்திருந்த ரூ.14 கோடியே 60 லட்சம் மதிப்பிலான பணம், வெள்ளிக் கட்டிகள், வெளிநாட்டு பணம் ஆகியவற்றை காவல்துறையினர் பறிமுதல் செய்தனர்.

மத்தியப் பிரதேசத்தின் உஜ்ஜெய்னியில் உள்ள ஒரு வீட்டில் சூதாடுவதாக, காவல் துறைக்கு கிடைத்த தகவலின் பேரில் நடந்த சோதனையில் உரிய ஆவணங்கள் இன்றி பதுக்கி வைத்திருந்த ரூ.14 கோடியே 60 லட்சம் மதிப்பிலான பணம், 7 கிலோ வெள்ளி பார்கள் மற்றும் 7 வெவ்வேறு நாடுகளைச் சேர்ந்த வெளிநாட்டு பணம் ஆகியவற்றை காவல் துறையினர் பறிமுதல் செய்தனர்.

காவல்துறையினர் நடத்திய சோதனையில் சூதாட்ட கும்பலைச் சேர்ந்த 9 பேரை கைது செய்யப்பட்டனர். அவர்களிடம் இருந்து 10-க்கும் மேற்பட்ட மொபைல்கள், 7 லேப்டாப்கள் பறிமுதல் செய்யப்பட்டன.

மேலும், முக்கிய குற்றவாளியான பியூஷ் சோப்ரா இன்னும் தலைமறைவாக உள்ளதாக காவல் துறை தலைவர் சந்தோஷ் குமார் சிங் கூரியுள்ளார்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

ஜன் சுராஜ் கட்சி ஆட்சிக்கு வந்தால் பிகாரில் மீண்டும் மது விற்பனை: உதய் சிங் அறிவிப்பு

சிரிப்பாலே சாய்த்தாளே... அஞ்சலி தாத்ரி!

கோப்பையிலே என் குடியிருப்பு... செளந்தர்யா ரெட்டி!

மெல்லச் சிரித்தாள்... லாவண்யா!

பெலாரஸ் பறவை... ஸ்ரவந்திகா!

SCROLL FOR NEXT