இந்தியா

இத்தாலியில் பிரதமர் மோடி- ரிஷி சுனக் சந்திப்பு

DIN

ஜி7 கூட்டமைப்பின் வருடாந்திர உச்சிமாநாட்டில் பங்கேற்க இத்தாலி சென்றுள்ள பிரதமர் மோடி, பிரிட்டன் பிரதமா் ரிஷி சுனக்கை சந்தித்து பேசியுள்ளார்.

அமெரிக்கா, பிரிட்டன், பிரான்ஸ், இத்தாலி, ஜொ்மனி, கனடா, ஜப்பான் ஆகிய நாடுகள் அங்கம் வகிக்கும் ஜி7 கூட்டமைப்பின் உச்சிமாநாடு, இத்தாலியின் அபுலியா பிராந்தியத்தில் வியாழக்கிழமை (ஜூன் 13) தொடங்கி சனிக்கிழமை (ஜூன் 15) வரை 3 நாள்கள் நடைபெறுகிறது.

வெள்ளிக்கிழமை (ஜூன் 14) நடைபெறும் மாநாட்டு அமா்வில் பிரதமா் மோடி பங்கேற்கிறார். இதற்காக பிரதமர் மோடி வெள்ளிக்கிழமை அதிகாலை இத்தாலி சென்றடைந்தார். இந்த நிலையில் இத்தாலி சென்றுள்ள பிரதமர் மோடி, தெற்கு இத்தாலிய ரிசார்ட் நகரில் பிரிட்டன் பிரதமா் ரிஷி சுனக்கை சந்தித்து பேசியுள்ளார்.

அப்போது இருதரப்பு உறவுகள் மற்றும் பொதுவான நலன்கள் குறித்து இரு தலைவர்களும் விவாதித்ததாக நம்பப்படுகிறது. இதற்கிடையே பிரான்ஸ் அதிபர் இம்மானுவேல் மேக்ரான், உக்ரைன் அதிபர் ஜெலென்ஸ்கி ஆகியோரையும் பிரதமர் மோடி சந்தித்து பேசியுள்ளார்.

முன்னதாக கடந்த செப்டம்பரில் நடந்த G20 உச்சிமாநாட்டில் பங்கேற்க தில்லி வந்தபோது பிரிட்டன் ரிஷி சுனக்கை, பிரதமர் மோடி சந்தித்திருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

நினைவுகள்... சுதா

கலைமாமணி விருது பெற்ற திரைக் கலைஞர்கள்! | Tamil Cinema | TNGovt | Award

ஆஸ்திரேலியாவில் சிறியரக விமானம் விபத்து: 3 பேர் பலி

என்ன சுகம் பாடல்!

காரைக்கால் ஜிப்மா் மருத்துவக் கல்லூரிக்கு வெடிகுண்டு மிரட்டல்

SCROLL FOR NEXT