கோப்புப் படம் 
இந்தியா

புணேவில் மதுபோதையால் மீண்டும் ஒரு விபத்து!

புணேவில் மதுபோதையினால் ஏற்பட்ட விபத்தில் 4 பேர் காயம்

DIN

புணேவில் மது அருந்திவிட்டு வாகனம் ஓட்டியதால் ஏற்பட்ட விபத்தில் நான்கு பேர் காயமடைந்தனர்.

புணேவில், இன்று (ஜூன் 14) 21 வயது இளைஞர் மது அருந்திவிட்டு எஸ்யூவி ரகக் காரை இயக்கியுள்ளார். மதுபோதையில் காரை ஓட்டியதால், கார் சாலையிலுள்ள தடுப்பின் மீது மோதியுள்ளது. கார் சாலைத் தடுப்பின் மீது மோதியதில், காரின் ஒரு சக்கரமானது கழன்று, அருகில் பயணித்துக் கொண்டிருந்த ஆட்டோ மீது மோதியுள்ளது. இதனால், ஆட்டோ நிலைதடுமாறி விபத்துக்குள்ளானது. இந்த விபத்தில் ஆட்டோவில் பயணித்த 4 பேர் காயமடைந்துள்ளனர்.

காயமடைந்தவர்கள் அருகிலிருந்த மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு, சிகிச்சை பெற்று வருகின்றனர். இதன் பின்னர், மது அருந்திவிட்டு வாகனம் ஓட்டியதால், அந்த இளைஞர் மீது இந்திய தண்டனைச் சட்டம் மற்றும் மோட்டார் வாகனச் சட்டத்தின் கீழ் வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது.

கடந்த மாதம், 17 வயது சிறுவன் மது அருந்திவிட்டு போர்ஷே காரை ஓட்டிய விபத்தில் இருவர் பலியாகி இருந்தனர்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

ஊரும் லிரிக்கல் பாடல் வெளியானது!

தமிழ் மண்ணில் அடிமைத்தனத்தை வீழ்த்துவோம்: உதயநிதிஸ்டாலின்

கூலி டிரெய்லர்!

6.50 லட்சம் பிகார் வாக்காளர்களை தமிழ்நாட்டில் இணைப்பதா? ப.சிதம்பரம் கண்டனம்!

கால்வாயில் கார் கவிழ்ந்து பலியானவர்களின் குடும்பத்துக்கு பிரதமர் நிதியுதவி!

SCROLL FOR NEXT