கோப்புப்படம் 
இந்தியா

உத்தரகண்டில் வேன் ஆற்றில் கவிழ்ந்து 8 பக்தர்கள் பலி

உத்தரகண்டில் வேன் ஆற்றில் கவிழ்ந்து 8 பக்தர்கள் பலி

DIN

டேஹ்ராடூன்: ரிஷிகேஷ் - பத்திநாத் தேசிய நெடுஞ்சாலையில் சென்றுகொண்டிருந்த சுற்றுலா வேன், ஆற்றில் கவிழ்ந்து விபத்துக்குள்ளானதில் அதில் இருந்த 8 பேர் பலியாகினர்.

மாநில பேரிடர் மீட்பப் படையினரும், உள்ளூர் காவல்துறையினரும் இணைந்து மீட்புப் பணிகளை மேற்கொண்டுள்ளனர்.

இந்த விபத்தில், 8 பேர் பலியாகினர். படுகாயமடைந்த வர்கள் அருகில் உள்ள மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

விபத்தில் சிக்கிய வாகனம், நொய்டாவிலிருந்து ருத்ரபிரயாக் நோக்கிச் சென்று கொண்டிருந்தபோது, 15, - 200 அடி பள்ளத்தில் கவிழ்ந்து ஆற்றில்விழுந்ததாகக் கூறப்படுகிறது. இதில், 7 பேர் சடலமாக மீட்கப்பட்டுள்ளனர். 9 பேர் படுகாயத்துடன் மருத்துவமனைக்குக் கொண்டு செல்லப்பட்ட நிலையில், வழியிலேயே ஒருவர் பலியானதாகவும் கூறப்படுகிறது.

வேன் ஓட்டுநர் படுகாயத்துடன் மீட்கப்பட்டுள்ளார். இந்த வாகனத்தில் எத்தனை பேர் வந்தனர் என்ற தகவல் கிடைக்கப்பெறவில்லை.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

காரைக்காலில் தொடர் மழை: பள்ளிகளுக்கு விடுமுறை!

அயலகத் தமிழா் மாநாட்டில் 4 ஒப்பந்தங்கள்

மணப்பாறையில் மயில்களை வேட்டையாடிய 5 போ் கைது

திருச்சி சந்திப்பு ரயில் நிலையத்தில் தீ தடுப்பு சோதனை

பெரிய சூரியூா் புதிய மைதானத்தில் மாவட்டத்தின் முதல் ஜல்லிக்கட்டு

SCROLL FOR NEXT