இந்தியா

பிபவ் குமாரின் காவல் ஜூன் 22 வரை நீட்டிப்பு!

ஸ்வாதி மாலிவால் வழக்கில் கைது செய்யப்பட்ட பிபவ்குமாரின் காவலை மீண்டும் தில்லி நீதிமன்றம் நீட்டித்துள்ளது.

DIN

முதல்வர் கேஜரிவாலின் உதவியாளர் பிபவ் குமாரின் நீதிமன்றக் காவல் ஜூன் 22 வரை நீட்டித்து தில்லி நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

ஆத் ஆத்மியின் மாநிலங்களவை எம்பி ஸ்வாதி மாலிவால் தாக்கப்பட்டதாகக் கூறப்படும் வழக்கில் கடந்த மே 13-ம் தேதி முதல்வர் கேஜரிவாலின் இல்லத்தில் வைத்து அவரது தனி உதவியாளர் பிபவ் குமார் பலமுறை தாக்கியதாகக் கூறப்படும் வழக்கில் மே 18-ம் தேதி அவரை கைது செய்தனர்.

இந்த நிலையில் திகார் சிறையில் அடைக்கப்பட்டுள்ள பிபவ் குமாருக்கு 14 நாள்கள் நீதிமன்றக் காவல் நேற்றுடன் நிறைவடைந்த நிலையில், சிறையில் காணொலி மூலம் நேற்று ஆஜர்படுத்தப்பட்டார். அப்போது அவரது காவலை மேலும் ஒரு நாள் நீட்டித்து நீதிபதி உத்தரவிட்டார்.

இதனிடையே இன்று மீண்டும் முன்னிறுத்தப்பட்ட நிலையில், பிபவ் குமாரின் காவலை ஜூன் 22ம் தேதி வரை நீட்டித்து நீதிபதி உத்தரவிட்டார்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

ரூ.38.50 லட்சத்தில் உடற்பயிற்சி கூடங்கள்: எம்எல்ஏ திறந்து வைத்தாா்

பெங்களூரில் வங்கி ஏடிஎம் மையங்களில் பணம் நிரப்பும் வேனை மறித்து ரூ. 7.11 கோடி கொள்ளை!

தொழிலாளிக்கு மிரட்டல் விடுத்தவர் கைது

கா்நாடக காங்கிரஸ் தலைவராக நானே தொடரமுடியாது: டி.கே.சிவகுமாா்

போதை இல்லா இந்தியா விழிப்புணா்வு நிகழ்ச்சி

SCROLL FOR NEXT