கோப்புப் படம். 
இந்தியா

சிஐடி விசாரணைக்கு ஆஜரானார் முதல்வர் எடியூரப்பா!

போக்சோ வழக்கு தொடர்பான விசாரணைக்காக சிஐடி முன்பு ஆஜரானார்.

DIN

கர்நாடகா முன்னாள் முதல்வர் பி.எஸ் எடியூரப்பா மீது பதிவு செய்யப்பட்ட போக்சோ வழக்கு தொடர்பான விசாரணைக்காக குற்றப்புலனாய்வுத்துறை(சிஐடி) முன்பு ஆஜரானார்.

மார்ச் 14 வழக்கு தொடர்பாக மூத்த பாஜக தலைவரை கைது செய்ய சிஐடிக்கு கர்நாடக உயர் நீதிமன்றம் வெள்ளிக்கிழமை தடை விதித்தது.

இந்த நிலையில், போக்சோ வழக்கில் ஜூன் 17 (இன்று)சிஐடி விசாரணைக்கு ஆஜராகவிருப்பதாக கர்நாடக முன்னாள் முதல்வர் எடியூரப்பா தெரிவித்திருந்த நிலையில், இன்று சிஜடி முன்பு ஆஜராகியுள்ளார்.

பெங்களூரு, சதாசிவ நகா் காவல் நிலையத்தில் முன்னாள் முதல்வா் எடியூரப்பா மீது பெண் ஒருவா் பாலியல் புகாா் அளித்திருந்தாா். டாலா்ஸ் காலனி இல்லத்தில் பிப். 2 ஆம் தேதி நடைபெற்ற கூட்டத்தில் பெண் ஒருவர் தனது 17 வயது மகளை முதல்வர் பாலியல் வன்கொடுமைக்கு உட்படுத்தியதாக குற்றம்சாட்டியிருந்தாா். அதன்பேரில் எடியூரப்பா மீது போக்சோ சட்டப் பிரிவு 8, இந்தியத் தண்டனை சட்டப் பிரிவு 354 ஏ இன் கீழ் வழக்குப் பதிவு செய்யப்பட்டது.

இந்த குற்றச்சாட்டை மறுத்துள்ள எடியூரப்பா, தனக்கெதிரான சதியில் ஈடுபடுபவர்களுக்கு மக்கள் தக்க பாடம் புகட்டுவார்கள் என்று தெரிவித்துள்ளார்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

ஐசிசி ஜூலை மாத விருதுக்கான போட்டியில் 3 கேப்டன்கள்! முச்சதம் விளாசிய முல்டருக்கு கிடைக்குமா?

கவின் கொலை வழக்கு: சுர்ஜித், தந்தையை காவலில் எடுக்க சிபிசிஐடி மனு!

எல்லைப் பிரச்னைக்குப் பின் முதல்முறை! சீனா செல்கிறார் பிரதமர் மோடி?

அனுஷ்காவின் காதி டிரைலர்!

தில்லியில்.. 8 வங்கதேசத்தினர் உள்பட 22 வெளிநாட்டவர் வெளியேற்றம்!

SCROLL FOR NEXT