மும்பையில் மருத்துவர் ஆர்டர் செய்த ஐஸ்கிரீமில் மனித விரல் இருந்த விவகாரத்தில் ஐஸ்கிரீம் நிறுவனத்தின் உரிமம் இடைநீக்கம் செய்யப்பட்டுள்ளது.
மும்பையில் உள்ள மலாடில் வசிக்கும் ஓர்லெம் பிரெண்டன் செர்ராவ் (27) என்ற மருத்துவர், தனியார் உணவு விநியோகம் செய்யும் நிறுவனத்தில் ஆர்டர் செய்த பட்டர் ஸ்காட்ச் ஐஸ்கிரீமை சாப்பிட்ட போது ஏதோ தவறாக இருப்பதை உணர்ந்தார்.
அவர் கூர்ந்து கவனித்தபோது, அதற்குள் ஒரு மனித விரல் இருப்பதைக் கண்டு அதிர்ச்சியடைந்தார்.
பின்னர் அவர் ஐஸ்கிரீமை கொண்டு மலாட் காவல் நிலையத்தில் புகாரளித்தார். உணவுக் கலப்படம் மற்றும் மனித உயிருக்கு ஆபத்து ஏற்படுத்தியதற்காக அந்த தனியார் நிறுவனம் மீது வழக்குப் பதிவு செய்யப்பட்டது.
போலீசார் ஐஸ்கிரீமை விசாரணைக்கும், மனித விரலை தடயவியல் ஆய்வுக்கும் அனுப்பியுள்ளனர்.
இந்த விவகாரத்தில் ஐஸ்கிரீம் நிறுவனத்தின் உரிமத்தை இந்திய உணவு பாதுகாப்பு மற்றும் தர நிர்ணய ஆணையம் இடைநீக்கம் செய்துள்ளது. இருப்பினும், தடயவியல் ஆய்வகத்தின் அறிக்கை இன்னும் நிலுவையில் உள்ளது.
சம்மந்தப்பட்ட ஐஸ்கிரீம் நிறுவனம் புணேவின் இந்தாபூரில் உள்ளது என்றும் அது மத்திய உரிமம் பெற்றுள்ளது என்றும் இந்திய உணவு பாதுகாப்பு மற்றும் தர நிர்ணய ஆணையம் தெரிவித்துள்ளது.
மேலும் ஐஸ்கிரீம் விற்பனையாளரின் வளாகத்திலிருந்து மாதிரிகளும் விசாரணைக் குழுவால் சேகரித்துள்ளதாகவும் குறிப்பிடப்பட்டுள்ளது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.