இந்தியா

வேகக் கட்டுப்பாட்டை மீறும் ரயில் ஓட்டுநர்கள்: குழு அமைத்து விசாரிக்கும் ரயில்வே!

ரயில் ஓட்டுநர்கள் வேகக் கட்டுப்பாட்டை மீறுவது அடிக்கடி நிகழ்வதால் அதனைக் கட்டுப்படுத்த ரயில்வே நிர்வாகம் குழு ஒன்றை அமைத்துள்ளது.

DIN

வேகக் கட்டுப்பாட்டை மீறி ரயிலை ஓட்டுநர்கள் இயக்குவதால் பெரும் விபத்துகள் ஏற்படலாம் என்பதால் அதனை விசாரிக்க ரயில்வே வாரியம் குழு அமைத்துள்ளது.

ஓட்டுநர்களின் கவனக்குறைவினால் வேகக் கட்டுப்பாட்டை மீறும் ரயில்களால் பல விபத்துகள் ஏற்பட வாய்ப்புகள் உள்ளன. வேகக் கட்டுப்பாடுகளை மீறுவது ரயிலின் பாதுகாப்புக்கு பெரிய அச்சுறுத்தலாக இருந்து வருகிறது.

இதனால், பல்வேறு பகுதிகளில் நிர்ணயிக்கப்பட்டதை விட அதிக வேகத்தில் ரயில் ஓட்டுநர்கள் செல்வதற்கானக் காரணங்களை ஆராய இந்தக் குழு முடிவு செய்துள்ளது.

ஒரு இடத்தில், 20 கி.மீ வேகத்தில் செல்லவேண்டிய ஆற்றுப்பாலத்தில் 100 கி.மீ வேகத்தில் ரயில் ஓட்டுநர் ரயிலை இயக்கியுள்ளார். அந்தப் பாலத்தில் பராமரிப்புப் பணிகள் நடந்துகொண்டிருந்த போதும் பெரிய விபத்து எதுவும் ஏற்படவில்லை என்று ரயில்வே அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

தில்லியின் ஹஸ்ரத் நிசாமுதீனிலிருந்து உத்திரப்பிரதேசத்தின் விரங்கனா லக்‌ஷ்மிபாய் ஜான்சி ஜங்சன் வரை செல்லும் இந்தியாவின் முதல் விரைவு ரயிலான கதிமான் எக்ஸ்பிரஸை அதன் ஓட்டுநர் மற்றும் துணை ஓட்டுநர் 160 கி.மீ வேகத்தில் இயக்கியதாக ரயில்வே அதிகாரிகள் குற்றஞ்சாட்டியுள்ளனர்.

அதேபோல, கத்ரா மற்றும் இந்தூர் இடையே ஓடும் மால்வா எக்ஸ்பிரஸும் வேகக் கட்டுப்பாட்டை மீறியுள்ளது.

இதுபோன்ற சம்பவங்கள் தொடர்ந்து நடைபெறுவதால், கடந்த ஜூன் 3 அன்று அனைத்து மண்டலங்களுக்கும் ரயில்வே வாரியம் ஒரு சுற்றறிக்கையை அனுப்பியது. அதில், ரயில் ஓட்டுநர்கள் மற்றும் ரயில் மேலாளர்களுக்குக் (காவலர்கள்) கொடுக்கப்பட்டுள்ள எச்சரிக்கையை மறுபரிசீலனை செய்ய அமைக்கப்பட்ட இந்தக் குழு, களத்தில் உள்ள சிக்கல்களை அறிந்துகொள்ள விடியோ கான்ஃபரன்ஸ் மூலம் ஓட்டுநர்களைத் தொடர்பு கொள்வார்கள் என்று தெரிவிக்கப்பட்டது.

கடந்த ஜூன் 5 அன்று நடந்த இணையவழிக் கூட்டத்தில் 180 ரயில் ஓட்டுநர்கள் மற்றும் ரயில் காவலர்கள் கலந்துகொண்டு வேகக்கட்டுபாட்டு மீறல்கள் குறித்த காரணங்கள் மற்றும் பரிசீலனைகளை ஆலோசித்ததாகவும், வேகக் கட்டுப்பாட்டை மீறும் ஓட்டுநர்கள் மீது இனி வரும் காலங்களில் கடுமையான நடவடிக்கைகள் எடுக்கப்படும் என்றும் கூறியதாகத் தகவல்கள் தெரிவிக்கின்றன.

பொதுவாக, ரயில் தண்டவாளங்கள் மற்றும் பாலங்களில் பழுதுபார்க்கும் வேலைகள் நடக்கும்போது மட்டுமே பெரும்பாலும் வேகக் கட்டுப்பாடு விதிக்கப்படும். அதுகுறித்த முழுமையான தகவல்கள் ரயில் ஓட்டுநருக்கு முன்னதாகவே வழங்கப்படுகிறது.

ஆலோசனைக் கூட்டத்தில், வேகக் கட்டுப்பாடு தேவைப்படும் இடங்களில் ரயில் காவலர் 3 கி.மீ-க்கு முன்பே வாக்கிடாக்கி மூலம் ஓட்டுநருக்கு நினைவூட்ட பரிந்துரை செய்யப்பட்டதாக அதிகாரிகள் தெரிவித்தனர்.

இந்த ஆலோசனைகளை குழு பரிந்துரைத்து நடவடிக்கை எடுக்கும் என ரயில்வே வாரியம் கூறியுள்ளது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

ஆடிப்பெருக்கு: நதியில் சிவலிங்கம் செய்து பக்தா்கள் வழிபாடு

நாளைய மின்தடை: கிளுவங்காட்டூா்

கனமழை: பஞ்சலிங்கம் அருவியில் வெள்ளப்பெருக்கு

ஞாயிறு சந்தை வியாபாரிகள் திடீா் சாலை மறியல்

மின்சாரம், குடிநீா் கோரி கிராம மக்கள் சாலை மறியல்

SCROLL FOR NEXT