காங்கிரஸ் தலைவர் மல்லிகார்ஜுன கார்கே இல்லத்தில் ஆலோசனைக் கூட்டம் நடைபெற்று வருகிறது.
இக்கூட்டத்தில் காங்கிரஸ் நாடாளுமன்ற குழு தலைவர் சோனியா காந்தி, எம்.பி., ராகுல் காந்தி, பொதுச்செயலாளர்கள் பிரியங்கா காந்தி, கே.சி. வேணுகோபால் ஆகியோர் பங்கேற்றுள்ளனர்.
இதில், மக்களவைத் தேர்தலில் ராகுல் காந்தி போட்டியிட்டு வெற்றி பெற்ற ரேபரேலி, வயநாடு ஆகிய இரு தொகுதிகளில் ஒன்றை ராஜிநாமா செய்வது குறித்து ஆலோசிக்கப்படுவதாகத் தெரிகிறது.
மக்களவைத் தேர்தலில் உத்தரப் பிரதேச மாநிலம் ரேபரேலி, அமேதி ஆகிய (காங்கிரஸின் முக்கியத் தொகுதிகள்) தொகுதிகளின் தேர்தல் பொறுப்பாளராக பிரியங்கா காந்தி செயல்பட்டார்.
இதேபோன்று கே.சி. வேணுகோபால் கேரளத்தை சேர்ந்தவர் என்பதால், வயநாடு நிலவரம் குறித்தும் விவாதிக்கப்படவுள்ளது.
இரு தொகுதிகளில் வெற்றி பெற்றால், ஒரு தொகுதி பதவியை ராஜிநாமா செய்ய வேண்டும் என்ற அரசியல் சாசன விதிப்படி, ஒரு தொகுதியில் ராகுல் காந்தி ராஜிநாமா செய்யவுள்ளார்.
கடந்தமுறை தேர்தலில் வெற்றி பெற்ற தொகுதி வயநாடு. இதேபோன்று காங்கிரஸ் கட்சிக்கு முக்கியமான தொகுதி ரேபரேலி. சோனியா காந்தி தொடர்ந்து போட்டியிட்டு வென்ற தொகுதி என்பதால், அதனைத் தக்கவைத்துக்கொள்வதில் காங்கிரஸ் நிலையாக இருக்கும்.
இந்நிலையில், எந்த காரணத்தை முன்வைத்து குறிப்பிட்ட தொகுதி பதவியை ராஜிநாமா செய்வது என்பது தொடர்பாக ஆலோசனை மேற்கொள்ளப்பட்டுள்ளது.
இது தொடர்பான அறிவிப்பு விரைவில் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.