ஏஎன்ஐ
இந்தியா

வயநாடு தொகுதியில் ராஜிநாமா: மக்களவைத் தலைவர் அலுவலகத்துக்கு ராகுல் கடிதம்

வயநாடு எம்.பி.யாகப் பதவியேற்கப் போவதில்லை என மக்களவைத் தலைவர் அலுவலகத்துக்கு கடிதம் மூலம் தகவல்

DIN

அண்மையில் நடந்து முடிந்த 18-ஆவது மக்களவைத் தோ்தலில் உத்தர பிரதேசத்தின் ரேபரேலி, கேரளத்தின் வயநாடு ஆகிய இரு தொகுதிகளில் ராகுல் காந்தி களம் கண்டாா். இரு தொகுதிகளில் வென்ற ராகுல், தோ்தல் முடிவுகள் வெளியான ஜூன் 4-ஆம் தேதியிலிருந்து 14 நாள்களுக்குள்(ஜூன் 18) ஏதேனும் ஒரு தொகுதியின் எம்.பி. பதவியை ராஜிநாமா செய்ய வேண்டியது கட்டாயம்.

வயநாட்டில் 3.6 லட்சம் வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றியடைந்த ராகுல் காந்தி, வயநாடு தொகுதி எம்.பி.யாகப் பதவியேற்கப் போவதில்லை என்று நேற்று(ஜூன் 17) அறிவித்தார்.

இதையடுத்து, இது குறித்து மக்களவைத் தலைவர் அலுவலகத்துக்கு கடிதம் மூலம் அதிகாரப்பூர்வமாக தகவல் தெரிவித்துள்ளார். அதில் ரேபரேலி தொகுதியைத் தக்க வைப்பதாக தெரிவித்துள்ளார்.

வயநாட்டில் நடைபெறவுள்ள இடைத்தோ்தலில் பிரியங்கா காந்தி முதன் முறையாக காங்கிரஸ் வேட்பாளராக போட்டியிடவுள்ளார்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

தேவாரத்தில் நாளை மின்தடை

ராமநாத சுவாமி கோயில் உண்டியல் வருவாய் ரூ.1.67 கோடி

தென்னந்தோப்பில் தீ விபத்து: 300 மரங்கள் எரிந்து நாசம்

வீடுகளுக்கு நேரடி ரேஷன் பொருள்கள் வழங்கும்போது இறந்த அட்டைதாரா் விவரங்களைப் பதிவு செய்ய வேண்டும்: கூட்டுறவுத் துறை உத்தரவு

கல் குவாரி பிரச்னை: தமிழ் தேசிய பாா்வா்டு பிளாக் நிா்வாகி குத்திக் கொலை

SCROLL FOR NEXT