நீட் விவகாரம் தொடர்பாக எவ்வித கருத்தும் தெரிவிக்காமல் மௌனம் காத்துவருகிறார் பிரதமர் மோடி என காங்கிரஸ் தலைவர் ராகுல் கேள்வி விமர்சித்துள்ளார்.
முன்னதாக உச்சநீதிமன்றத்தில் இன்று(ஜூன் 18) நீட் முறைகேடுகள் தொடர்பான வழக்கு விசாரணையின் போது, நீட் விவகாரத்தில் 0.001%, அதாவது மிகச்சிறிய அளவில் தவறு நிகழ்ந்திருந்தால் கூட கடும் நடவடிக்கை எடுக்க அரசுக்கும், தேசிய தேர்வு முகமைக்கும்(என்டிஏ) நீதிமன்றம் அறிவுறுத்தியுள்ளது குறிப்பிடத்தக்கது. வழக்கின் அடுத்தகட்ட விசாரணை ஜூலை 8-ஆம் தேதிக்கு ஒத்தி வைக்கப்பட்டுள்ளது.
இந்த நிலையில், நீட் விவகாரம் தொடர்பாக மத்திய அரசை விமர்சித்து ராகுல் காந்தி தெரிவித்திருப்பதாவது, நீட் விவகாரத்தில் திட்டமிட்டு முறைகேடு நடந்திருப்பதை, பிகார், குஜராத், ஹரியாணா உள்ளிட்ட மாநிலங்களில் மேற்கொள்ளப்பட்டுள்ள கைது நடவடிக்கைகள் மூலம் தெளிவாகியுள்ளது.
வினாத்தாள் கசிய விடப்படும் விவகாரங்களில் உறுதியான கொள்கைகளை வகுப்பதில் இளைஞர்களின் குரலை நாடாளுமன்றத்தில் ஒலிக்கச் செய்வதில் காங்கிரஸ் கட்சி அக்கறை கொண்டு செயல்படுகிறது.
தேர்வு வினாத்தாள்கள் முன்கூட்டியே வெளியாகும் விவகாரத்தில் பாஜக ஆளும் மாநிலங்கள் மையப்புள்ளிகளாக மாறியுள்ளன என்று குற்றஞ்சாட்டியுள்ளார்.
நீட் தேர்வில் 24 லட்சத்துக்கும் மேற்பட்ட மாணவர்களின் எதிர்காலம் சம்பந்தப்பட்ட விவகாரத்தில் வழக்கம்போல மௌனம் காத்து வருகிறார் நரேந்திர மோடி எனப் பதிவிட்டு விமர்சித்துள்ளார் ராகுல் காந்தி.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.