தில்லி முதல்வர் கேஜரிவாலுக்கு ஜாமீன்!
மதுபான கலால் கொள்கை முறைகேடு வழக்கில் கேஜரிவாலுக்கு ஜாமீன்
மதுபான கலால் கொள்கை முறைகேடு வழக்கில் குற்றம்சாட்டப்பட்ட தில்லி முதல்வர் அரவிந்த் கேஜரிவாலுக்கு ஜாமீன் வழங்கி உத்தரவிட்டுள்ளது தில்லி உயர்நீதிமன்றம்.
இந்த தீர்ப்பினை தில்லி நீதிமன்றத்தின் விடுமுறைக்கால நீதிபதி நியாய் பிந்து தலைமையிலான அமர்வு வியாழக்கிழமை அளித்துள்ளது.
ரூ.1 லட்சத்துக்கான ஜாமீன் பத்திரம் அளித்துவிட்டு வெள்ளிக்கிழமை திகார் சிறையிலிருந்து கேஜரிவால் விடுதலையாகிறார்.
Advertisement
Advertisement
மார்ச் 21-ம் தேதி அமலாக்கத்துறை சார்பில் கைது செய்யப்பட்டார் அரவிந்த் கேஜரிவால். மே மாதம் இடைக்கால பிணையில் வெளிவந்தவர் ஜூன் 2-ம் தேதி சரணடைந்தது குறிப்பிடத்தக்கது.
கருத்துகள்
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.