முகப்பு
இந்தியா

ஒடிஸா பேரவைத் தலைவர் போட்டியின்றி தேர்வு!

ஒடிஸா பேரவைத் தலைவராக சுரமா பதி போட்டியின்றி தேர்வு செய்யப்பட்டார்.

இந்தியா

ஒடிஸா பேரவைத் தலைவர் போட்டியின்றி தேர்வு!

ஒடிஸா பேரவைத் தலைவராக சுரமா பதி போட்டியின்றி தேர்வு செய்யப்பட்டார்.

Updated On : 20 ஜூன், 2024 at 7:14 AM
பகிர்:

ஒடிஸாவில் சட்டப்பேரவைத் தலைவராக பாரதீய ஜனதா கட்சியின் மூத்த தலைவர் சுரமா பதி போட்டியின்றி தேர்வு செய்யப்பட்டுள்ளார்.

நயாகர்க் மாவட்டத்தின் ரன்பூர் சட்டப்பேரவைத் தொகுதியில் இருந்து சுரமா பதி இரண்டு முறை எம்எல்ஏ வாக தேந்தெடுக்கப்பட்டவர்.

இடைக்கால பேரவைத் தலைவரான ரானந்தா பிரதாப் ஸ்வைன் தனது பொறுப்புகளை சட்டப்பேரவையின் சிறப்பு அமர்வில் புதிய பேரவைத் தலைவரிடம் ஒப்படைத்தார்.

புதிய பேரவைத் தலைவருக்கு முதல்வர் மோகன் சரண் மாஜீ, துணை முதல்வர்கள் கே.வி.சிங் தியோ, பிரவதி பரிதா, எதிர்க்கட்சித் தலைவர் நவீன் பட்நாயக் உள்ளிட்டோர் வாழ்த்து தெரிவித்துள்ளனர்.

பிஜு ஜனதா தளத்தின் பிரமிளா மாலிக்கு பின்னர் ஒடிஸா சட்டப்பேரவைக்கு தேர்ந்தெடுக்கப்பட்ட இரண்டாவது பெண் பேரவைத் தலைவர் சுரமா பதி ஆவார்.

ஒடிஸாவில் மொத்தமுள்ள 147 தொகுதிகளில் 78 தொகுதிகளில் வென்று பாஜக ஆட்சியைப் பிடித்தது.

முழு கட்டுரையைப் படிக்க →