குடியரசுத் தலைவர் திரௌபதி முர்மு படம் | இந்திய குடியரசுத் தலைவரின் எக்ஸ் தளப் பதிவு
இந்தியா

இந்தியாவின் தனித்துவமான பரிசு யோகா! -திரௌபதி முர்மு

யோகா இந்தியாவின் தனித்துவமான பரிசு என திரௌபதி முர்மு கூறியுள்ளார்.

DIN

குடியரசுத் தலைவர் திரௌபதி முர்மு, “யோகா என்பது மனிதகுலத்திற்கு கொடுக்கப்பட்ட இந்தியாவின் தனித்துவமான பரிசு. வாழ்க்கை முறை தொடர்பான பிரச்னைகளுக்கு யோகா மிகவும் முக்கியத்துவம் வாய்ந்ததாக மாறியுள்ளது” எனக் கூறியுள்ளார்.

சர்வதேச யோகா தினத்தை முன்னிட்டு குடியரசுத் தலைவர் திரௌபதி முர்மு மற்றும் அதிகாரிகளுடன் இணைந்து ராஷ்டிரபதி பவனில் யோகாசனம் செய்தார்.

இதுகுறித்து குடியரசுத் தலைவர் திரௌபதி முர்மு எக்ஸ் தளப் பக்கத்தில் வெளியிட்டுள்ளப் பதிவில், “சர்வதேச யோகா தினத்தில் ஒட்டுமொத்த உலக சமூகத்திற்கும், இந்தியாவின் குடிமக்களுக்கும் எனது வாழ்த்துக்கள். யோகா என்பது மனிதகுலத்திற்கு இந்தியாவின் தனித்துவமான பரிசு. அதிகரித்து வரும் வாழ்க்கை முறை தொடர்பான பிரச்னைகளுக்கு யோகா மிகவும் முக்கியமானதாகிவிட்டது. யோகா என்பது உடல், மன, ஆன்மிக நல்வாழ்வுக்கான ஒரு வழியாகும். நமது அன்றாட வாழ்வின் ஒருங்கிணைந்த பகுதியாக யோகாவை ஏற்றுக்கொள்ள வேண்டும்” எனக் குறிப்பிட்டுள்ளார்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

சூப்பர் 8 சுற்று: இந்தியாவுக்கு எதிராக தென்னாப்பிரிக்கா பேட்டிங்!

மிஸ் பண்ணிடாதீங்க... ரிசர்வ் வங்கியில் 650 உதவியாளர்கள் பணியிடங்களுக்கு விண்ணப்பங்கள் வரவேற்பு!

இலங்கை பேட்டர்கள் சொதப்பல்; இங்கிலாந்து அபார வெற்றி!

இந்த வாரம் கலாரசிகன் - 22-02-2026

முன்னேர் வழியில் பொன்னேர் பூட்டிய கம்பர்

SCROLL FOR NEXT