குஜராத் மாநிலம் அகமதாபாத்தில் இயங்கி வந்த உணவகத்தில் பரிமாறப்பட்ட சம்பாரில் குட்டி எலி இருந்தது கண்டுபிடிக்கப்பட்டதைத் தொடர்ந்து அந்த உணவகத்துக்கு சீல் வைக்கப்பட்டது.
உணவகத்துக்கு சாப்பிட வந்த குடும்பத்தினருக்குப் பரிமாறப்பட்ட சாம்பாரில் ஒரு குட்டி எலி செத்துக் கிடந்ததைப் பார்த்து அவர்கள் சுகாதாரத் துறைக்குப் புகார் அளித்தனர்.
உணவகத்தை சோதனையிட்ட அதிகாரிகள், உணவகத்தின் சமையலறையில், சுகாதார சீர்கேடு ஏற்படுத்தும் வகையில் உணவுகள் தயாரிக்கப்பட்டது கண்டுபிடிக்கப்பட்டதையடுத்து உணவகத்தை பூட்டி அதிகாரிகள் சீல் வைத்தனர்.
சமையலறை மற்றும் சாமான்களை வைத்திருக்கும் இடங்களில் போதுமான பாதுகாப்பு அம்சங்கள் இல்லாதிருந்ததும், அங்கு பூச்சிகள் உலாவும் வகையில் இருந்ததும் அதிகாரிகளால் சுட்டிக்காட்டப்பட்டு விளக்கம் கேட்கப்பட்டுள்ளது.
இதுவரை கரப்பான் பூச்சி போன்றவைதான் உணவில் இருந்து எடுக்கப்பட்டிருக்கும். ஆனால், ஒரு குட்டி எலியே சாம்பாரில் செத்துக்கிடந்தது சாப்பிட வந்தவர்களை அதிர்ச்சிக்குள்ளாக்கியது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.