புகைப்படம் நன்றி: IANS 
இந்தியா

பிகாரில் மேலும ஒரு பாலம் இடிந்தது: ஒரு வாரத்தில் இரண்டாவது நிகழ்வு

DIN

பிகாரில் ஒரு வாரத்தில் மேலும் ஒரு பாலம் இடிந்து விழுந்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

பிகார் மாநிலம், சிவான் மாவட்டத்தில் கண்டக் கால்வாய் மீது கட்டப்படிருந்த சிறிய பாலம் சனிக்கிழமை இடிந்து விழுந்தது. அதிகாலை 5 மணியளவில் நிகழ்ந்த இந்த சம்பவத்தில் யாருக்கும் காயம் ஏற்படவில்லை.

படேடா மற்றும் கனௌலி ஆகிய இரு கிராமங்களை இணைக்கும் வகையில் 45 ஆண்டுகளுக்கு முன்பு இந்த பாலம் கட்டப்பட்டிருந்தது குறிப்பிடத்தக்கது.

இதுகுறித்து கிராமவாசி முகமது நயிம் கூறுகையில், "பொதுமக்கள் பங்களிப்பு மூலம் கட்டப்பட்ட பாலம், மாவட்ட நிர்வாகத்தின் அலட்சியத்தால் இடிந்து விழுந்தது.

பாதிக்கப்பட்ட கிராமங்களை இணைக்க மாநில அரசு மாற்று ஏற்பாடுகளை செய்ய வேண்டும்.

இதனால் சுமார் 20,000 பேர் பாதிக்கப்படுவார்கள். மாவட்ட நிர்வாகம் சார்பில் யாரும் பாலத்தை ஆய்வு செய்ய வராதது அதிர்ச்சியளிக்கிறது என்றார்.

முன்னதாக ஜூன் 18ஆம் தேதி அராரியா மாவட்டத்தில் பாலம் ஒன்று இடிந்து விழுந்த நிலையில் அடுத்த சில நாட்களில் மாநிலத்தில் மேலும் ஒரு பாலம் இடிந்து விழுந்திருப்பது குறிப்பிடத்தகக்து.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

முன்னாள் முதல்வர் கருணாநிதி நினைவிடம் நோக்கி ஆகஸ்ட் 7-ல் அமைதிப் பேரணி!

சொல்லப் போனால்... பஹல்காமிலிருந்து லெவல் கிராசிங் வரை...

தமிழகத்துக்கு மின்-பேருந்துகள்: டாடா மோட்டாா்ஸ் ஒப்பந்தம்

அரையாண்டில் 5% சரிந்த வீடுகள் விற்பனை

மனகஷ்டம் நீங்கும் இந்த ராசிக்கு: தினப்பலன்கள்!

SCROLL FOR NEXT