நீட் தேர்வுக்கு எதிராக போராட்டம். 
இந்தியா

நீட் முறைகேடு: தேசிய தேர்வு முகமை தலைவர் மாற்றம்

நீட் முறைகேடு: தேசிய தேர்வு முகமை புதிய தலைவராக பிரதீப் சிங் கரோலா நியமனம்

DIN

நீட் தேர்வு முறைகேடு எதிரொலியாக தேசிய தேர்வு முகமையின் தலைவரை மாற்றம் செய்து மத்திய அரசு உத்தரவிட்டுள்ளது.

இதைத்தொடர்ந்து தேசிய தேர்வு முகமையின் புதிய தலைவராக பிரதீப் சிங் கரோலா நியமனம் செய்யப்பட்டுள்ளார். இந்திய வர்த்தக மேம்பாட்டு அமைப்பின் தலைவராக உள்ள அவருக்கு இந்த கூடுதல் பொறுப்பு வழங்கப்பட்டுள்ளது.

அதேசமயம் தற்போதைய தலைவர் சுபோத்குமார் சிங் கட்டாய காத்திருப்பு பட்டியலுக்கு மாற்றம் செய்யப்பட்டுள்ளார்.

நீட், நெட் தேர்வு வினாத்தாள்கள் கசிந்த விவகாரத்தில் 7 பேர் கொண்ட உயர்நிலைக் குழுவை அமைத்து மத்திய அரசு உத்தரவிட்ட நிலையில் இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

நீட் முறைகேட்டை கண்டித்து நாடு முழுவதும் போராட்டங்கள் வலுத்து வந்த நிலையில் தேசிய தேர்வு முகமை தலைவர் மாற்றம் செய்யப்பட்டிருப்பது குறிப்பிடத்தக்க்கது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

இன்றைய ராசி பலன்கள்!

அரசு நிலத்தை ஆக்கிரமித்தவா் மீது நடவடிக்கை : கோட்டாட்சியரிடம் மனு

திருவள்ளூா்: 10.43 லட்சம் பேருக்கு குடற்புழு நீக்க மாத்திரைகள்

தூய்மைப் பணியாளா்களுக்கு ரூ.10 லட்சத்தில் நலத்திட்ட உதவிகள்: நலவாரியத் தலைவா் வழங்கினாா்

ஸ்ரீமுத்துமாரியம்மன் கோயிலுக்கு 108 பால்குட ஊா்வலம்

SCROLL FOR NEXT