(கோப்பு படம்)
இந்தியா

தேசிய பூங்காவில் மின்சாரம் தாக்கி 2 குட்டிகளுடன் சிறுத்தை பலி!

தேசிய பூங்காவில் மின்சாரம் தாக்கி 2 குட்டிகளுடன் சிறுத்தை பலியானது.

DIN

ராஜஸ்தானின் சரிஸ்கா தேசிய பூங்காவில் மின்சாரக் கம்பி அறுந்து விழுந்ததில் சிறுத்தையும், அதன் இரண்டு குட்டிகளும் பலியானதாக மாவட்ட வன அதிகாரிகள் சனிக்கிழமை தெரிவித்தனர்.

ராஜஸ்தானின் அல்வார் மாவட்டத்தின் அம்ரத்வாஸ் கிராமத்திற்கு அருகிலுள்ள டெஹ்ரா-ஷாபுரா மலைத்தொடரில் இந்த சம்பவம் நடந்ததாக அவர்கள் தெரிவித்தனர்.

இதுகுறித்து அல்வார் மாவட்ட வன அதிகாரி ராஜேந்திர சிங் கூறுகையில், மின்சார கம்பி அறுந்து சிறுத்தை மற்றும் அதன் இரண்டு குட்டிகள் மீது விழுந்தது. இதனால், சம்பவ இடத்திலேயே தாய் சிறுத்தை மற்றும் அதன் குட்டிகள் பரிதாபமாக பலியாகியுள்ளன.

அல்வார் மாவட்ட கால்நடை மருத்துவமனையில் பிரேதப் பரிசோதனை நடத்தப்பட்டு வருகிறது. இதுகுறித்து விசாரணை நடத்தி உயர் அதிகாரிகளுக்கு அறிக்கை அனுப்பப்பட்டுள்ளதாகவும் அவர் கூறினார்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

வாக்காளா் பட்டியல் சிறப்பு திருத்தப் பணி! முதல் சவால் என்ன?

கவனம் ஈர்க்கும் மிடில் கிளாஸ் டீசர்!

மலரும் தீயும் வடகிழக்கு இந்தியப் பயணம்

ஜாய் கிரிசில்டா குழந்தைக்கு நான்தான் தந்தை!! ஒப்புக்கொண்ட மாதம்பட்டி ரங்கராஜ்

பாரதியின் காளி

SCROLL FOR NEXT