கோப்புப் படம் 
இந்தியா

பூமியை நோக்கிவரும் விண்கல்: தாக்குவதற்கு 72% வாய்ப்பு?

மிகவும் அபாயகரமான விண்கல் ஒன்று, பூமியை தாக்க 72% வாய்ப்புள்ளதாக நாசா செய்முறை பயிற்சி மேற்கொண்டது.

DIN

மிகவும் அபாயகரமான விண்கல் ஒன்று, பூமியை தாக்க 72% வாய்ப்புள்ளதாக நாசா செய்முறை பயிற்சி மேற்கொண்டது. அது பூமியின் மீது மோதும் காலத்தையும் நாசா குறிப்பிட்டது.

கோள்களின் ஒருங்கிணைந்த பாதுகாப்பு குறித்து ஆண்டுக்கு இருமுறை நாசா செய்முறை பயிற்சியை மேற்கொள்ளும். அந்தவகையில், 5வது ஆண்டாக கடந்த ஏப்ரல் மாதம் அந்த பயிற்சி மேற்கொள்ளப்பட்டது.

இதன் சுருக்கத்தை மேரிலாந்தின் லெளரலில் உள்ள ஜான்ஸ் ஹாப்கின்ஸ் பயன்பாட்டு இயற்பியல் ஆய்வகத்தில் ஜூன் 20 ஆம் தேதி, நாசா வெளியிட்டது.

இதில் நாசாவைத் தவிர, பல்வேறு அமெரிக்க அரசு நிறுவனங்கள் மற்றும் துறை ரீதியான சர்வதேச கூட்டுப் பணியாளர்கள் என கிட்டத்தட்ட 100 பிரதிநிதிகள் பங்கேற்றிருந்தனர்.

இந்த செய்முறை பயிற்சியில், பூமியைத் தாக்குவதற்கான அபாயம் ஏதும் கண்டறியப்படவில்லை. ஆனால், அபாயகரமான விண்கல்லை எதிர்கொள்ளும் பூமியின் திறன் குறித்து அறியப்பட்டதாக நாசா குறிப்பிட்டுள்ளது.

இது குறித்து வாஷிங்டனில் உள்ள நாசா தலைமையகத்தின் கோள்கள் பாதுகாப்பு அதிகாரி, லி்ன்ட்லி ஜான்சன் கூறுகையில், இந்த ஆய்வு ஆரம்ப நிலைகளில் உள்ள நிச்சயமற்ற தன்மைகள் மற்றும் சவாலான சூழ்நிலைகளைக் கருத்தில் கொள்ள அனுமதித்ததாகக் குறிப்பிட்டார்.

நாசா வெளியிட்டுள்ள பயிற்சியின் சுருக்கத்தில், ஆரம்பகட்ட கணிப்பின்படி, தோராயமாக அடுத்த 14 ஆண்டுகளில் பூமியின் மீது விண்கல் தாக்கும் அபாயம் உள்ளதாக எடுத்துக்கொள்ளப்பட்டது.

துல்லியமாக கணக்கிட்டால், 2038 ஜூலை 12 ஆம் தேதி தாக்குதற்கு 72% வாய்ப்புள்ளது. (இன்னும் 14.25 ஆண்டுகள்)

எனினும் எரிகல்லின் அளவு, கலவை மற்றும் அதன் நீண்ட காலப் பாதையை துல்லியமாக தீர்மானிக்க இந்த ஆரம்பநிலைத் தரவுகள் போதுமானதாக இல்லை என்று நாசா தெரிவித்துள்ளது.

இந்தப் பயிற்சியின் வெளிப்பாடாக விண்கல்லை எதிர்கொள்வதற்கான போதிய தொழில்நுட்ப பலம், உலகளாவிய ஒருங்கிணைப்பு போன்றவற்றை மேலாண்மை செய்யும் திறன் குறைவாக உள்ளதாக நாசா குறிப்பிடப்பட்டுள்ளது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பாலியல் வழக்கு: பிரஜ்வல் ரேவண்ணாவுக்கு ஆயுள் தண்டனை!

ஓவல் டெஸ்ட்டில் டிஆர்எஸ் சர்ச்சை; கள நடுவர் செய்தது சரியா?

சாலையோரத்தில் ஒரே குடும்பத்தைச் சேர்ந்த மூவரின் சடலம்.. ராஜஸ்தானில் அதிர்ச்சி!

கட்டாய மதமாற்ற வழக்கு: கேரள கன்னியாஸ்திரிகளுக்கு ஜாமீன்

முதல்வர் மீது விடுதலைச் சிறுத்தைகள் கட்சிக்கு நம்பிக்கை இல்லை: நயினார் நாகேந்திரன்

SCROLL FOR NEXT