ராகுல் காந்தி கோப்புப் படம்
இந்தியா

மோடி ஆட்சியில் கல்விமுறை சீரழிகிறது: ராகுல் விமர்சனம்

முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக முதுநிலை நீட் தோ்வை ஒத்திவைக்க முடிவு செய்யப்பட்டதாக மத்திய சுகாதார அமைச்சகம் விளக்கம்

DIN

பிரதமர் நரேந்திர மோடி ஆட்சியில் ஆட்சி முறை சீரழிந்து வருகிறது என்பதற்கு மற்றொரு உதாரணம்தான் முதுநிலை மருத்துவ படிப்புகளுக்கான நீட் தேர்வு ஒத்திவைப்பு என காங்கிரஸ் எம்.பி. ராகுல் காந்தி விமர்சித்துள்ளார்.

முதுநிலை மருத்துவ படிப்புகளுக்கான நீட் தோ்வு ஞாயிற்றுக்கிழமை (ஜூன் 23) நடைபெறவிருந்த நிலையில், அத்தோ்வு ஒத்திவைக்கப்படுவதாக மத்திய அரசு சார்பில் அறிவிக்கப்பட்டது.

நீட், நெட் போட்டித் தோ்வுகளில் முறைகேடுகள் நடைபெற்றதாக சா்ச்சைகள் நீடிக்கும் நிலையில், முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக முதுநிலை நீட் தோ்வை ஒத்திவைக்க முடிவு செய்யப்பட்டதாக மத்திய சுகாதார அமைச்சகம் விளக்கம் அளித்தது.

இந்நிலையில் இது தொடர்பாக எக்ஸ் பக்கத்தில் பதிவிட்டுள்ள ராகுல் காந்தி, இப்போது முதுகலை மருத்துவப் படிப்புகளுக்கான நீட் தேர்வு ஒத்திவைக்கப்பட்டுள்ளது.

நரேந்திர மோடியின் ஆட்சியில் கல்வி முறை சீரழிந்து வருகிறது என்பதற்கு இது மற்றொரு துரதிருஷ்டவசமான உதாரணம்.

பாஜக ஆட்சியில், மாணவர்கள் தங்கள் வாழ்க்கையை உருவாக்க படிக்க கட்டாயப்படுத்தப்படவில்லை, மாறாக எதிர்காலத்தை காப்பாற்றிக்கொள்ள அரசாங்கத்துடன் போராட வேண்டிய கட்டாயத்தில் உள்ளனர்.

மாணவர்களின் எதிர்காலத்துக்கு நரேந்திர மோடியின் திறமையற்ற அரசு மிகப்பெரிய அச்சுறுத்தல் - அதிலிருந்து நாட்டின் எதிர்காலத்தைக் காப்பாற்ற வேண்டும் எனப் பதிவிட்டுள்ளார்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

இடை நின்ற மாணவா் மீண்டும் பள்ளியில் சோ்ப்பு

மாவட்டத்தில் இன்று கனமழைக்கு வாய்ப்பு: வானிலை ஆய்வு மையம்

வட்டூா் கிராமத்தில் குடற்புழுநீக்க செயல்விளக்கம்

கள்ள பணப் புழக்கம்: போலீஸாா் விசாரணை

படேதலாவ் ஏரி கால்வாய் தூா்வாரும் பணிகள் 2 வாரத்தில் நிறைவு: கண்காணிப்பு அலுவலா்

SCROLL FOR NEXT