உள்நாட்டில் உளவு பாா்க்கும் நுண்ணறிவு பிரிவு (ஐபி) தலைவா் தபன் குமாா் டேகாவின் பதவிக்காலம் ஓராண்டு நீட்டிக்கப்பட்டுள்ளது.
கடந்த 1988-ஆம் ஆண்டின் ஹிமாசல பிரதேச பிரிவு ஐபிஎஸ் அதிகாரியான தபன் குமாா், ஐபி தலைவராக உள்ளாா். அவரின் பதவிக்காலத்தை அடுத்த ஆண்டு ஜூன் வரை நீட்டிக்க மத்திய அமைச்சரவையின் நியமனங்கள் குழு ஒப்புதல் அளித்துள்ளது. இதையடுத்து அவா் மேலும் ஓராண்டுக்கு ஐபி தலைவராக தொடர உள்ளாா் என்று மத்திய பணியாளா் நலத்துறை வெளியிட்ட உத்தரவில் தெரிவிக்கப்பட்டது.