ராபர்ட் வதேரா 
இந்தியா

வயநாட்டில் பிரியங்கா வெற்றி பெற்றால்... கணவர் ராபர்ட் வதேரா பதில்!

வயநாட்டில் பிரியங்கா காந்தி போட்டியிடுவது குறித்து அவரின் கணவர் ராபர்ட் வதேரா ஆங்கில ஊடகத்துக்கு பேட்டியளித்துள்ளார்.

DIN

வயநாட்டில் பிரியங்கா காந்தி போட்டியிடுவது குறித்து அவரின் கணவர் ராபர்ட் வதேரா ஆங்கில ஊடகத்துக்கு பேட்டியளித்துள்ளார்.

மக்களவைத் தேர்தலில் வயநாடு மற்றும் உத்தரப் பிரதேசத்தின் ரேபரேலி ஆகிய தொகுதிகளில் போட்டியிட்டு வெற்றி பெற்ற ராகுல் காந்தி, வயநாட்டில் தனது பதவியை ராஜிநாமா செய்தார். ரேபரேலியின் உறுப்பினராக தொடரவுள்ளதாகவும் தெரிவித்திருந்தார்.

மேலும், வயநாடு தொகுதியில் காங்கிரஸ் சார்பில் அக்கட்சியின் பொதுச்செயலாளர் பிரியங்கா காந்தி வேட்பாளராக அறிவிக்கப்பட்டார். இதனை கேரள மாநில காங்கிரஸ் உள்பட கூட்டணி கட்சியினர் வரவேற்றனர்.

இந்நிலையில், பிரியங்கா காந்தி வயநாட்டில் போட்டியிடுவது குறித்து அவரின் கணவர் ராபர்ட் வதேரா ஏஎன்ஐ செய்தி நிறுவனத்துக்கு பேட்டிளிதுள்ளார்.

அவர் பேசியதாவது, ''வயநாடு தொகுதி மக்களிடமிருந்து எண்ணற்ற அன்பை ராகுல் காந்தி பெற்றுள்ளார். அவரும் அம்மக்கள் மீது அதே அளவு அன்பு கொண்டுள்ளார். அங்கு பிரியங்கா காந்தி போட்டியிடுவது மகிழ்ச்சி அளிக்கிறது. அவர் வயநாட்டில் வெற்றி பெற்று எம்.பி.யாக தேர்வானால், ராகுல் காந்தி என்ன செய்ய வேண்டும் என நினைத்திருந்தாரோ, அதனை பிரியங்கா காந்தி பூர்த்தி செய்வார். அதிக வாக்குகள் வித்தியாசத்தில் பிரியங்காவை வெற்றிபெறச் செய்வார்கள் என்று நம்புகிறேன். அவர் நிச்சயம் நாடாளுமன்றத்திற்கு செல்வார்'' எனக் குறிப்பிட்டார்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

நெரிசலை திட்டமிட்டு உருவாக்க முடியாது: தொல். திருமாவளவன்

பாகிஸ்தான்: மோதலில் 7 போலீஸாா், 6 பயங்கரவாதிகள் பலி!

வேன்-பைக் மோதல்: வியாபாரி மரணம்

கிராம சபைக் கூட்டத்தை புறக்கணித்து பொதுமக்கள் உண்ணாவிரதம்

ஹூண்டாய் விற்பனை 10% அதிகரிப்பு

SCROLL FOR NEXT