ஓம் பிர்லா, கொடிக்குன்னில் சுரேஷ் 
இந்தியா

ஓம் பிர்லா, கே. சுரேஷ் போட்டி: முதல்முறையாக மக்களவைத் தலைவர் பதவிக்கு தேர்தல்!

மக்களவையில் நாளை(ஜூன் 26) காலை வாக்கெடுப்பு நடைபெறவுள்ளது.

இணையதளச் செய்திப் பிரிவு

18-வது மக்களவைத் தலைவர் பதவிக்கு தேசிய ஜனநாயகக் கூட்டணி சார்பில் பாஜகவின் ஓம் பிர்லாவும், இந்தியா கூட்டணி சார்பில் காங்கிரஸின் கொடிக்குன்னில் சுரேஷும் வேட்புமனுத் தாக்கல் செய்துள்ளனர்.

இதன்மூலம், இந்திய வரலாற்றில் முதல்முறையாக மக்களவைத் தலைவர் பதவிக்கு நாளை தேர்தல் நடைபெறுவது உறுதியாகியுள்ளது.

இதுவரை மக்களவைத் தலைவர் பதவிக்கு தேர்தல் நடைபெறாமல், ஒருமனதாக அனைத்துக் கட்சியும் தேர்ந்தெடுத்து வந்தனர்.

தேசிய ஜனநாயகக் கூட்டணி எம்பிக்களுடன் சென்று வேட்புமனு தாக்கல் செய்த ஒம் பிர்லா

மக்களவைத் தலைவர் ஒருமனதாக தேர்ந்தெடுக்கப்படும் மரபை பின்தொடர காங்கிரஸ் கட்சித் தலைவர் மல்லிகார்ஜுன கார்கேவை தொடர்பு கொண்டு மத்திய அமைச்சர் ராஜ்நாத் சிங் ஆதரவு கோரியுள்ளார்.

அவரிடம், பாஜகவின் மக்களவைத் தலைவர் வேட்பாளருக்கு ஆதரவு அளிக்க தயாராக இருப்பதாகவும், ஆனால், மரபுப்படி மக்களவைத் துணைத் தலைவர் பதவியை எதிர்க்கட்சிகளுக்கு அளிக்க கோரி கார்கே வலியுறுத்தி இருந்தார்.

மீண்டும் அழைப்பதாக கூறிய ராஜ்நாத் சிங், இதுவரை அழைக்கவில்லை என்றும், எங்களின் தலைவரை அவமானப்படுத்தியுள்ளார்கள் என்றும் ராகுல் காந்தி இன்று விமர்சித்திருந்தார்.

இந்தியா கூட்டணி எம்பிக்களுடன் சென்று வேட்புமனு தாக்கல் செய்த கொடிக்குன்னில் சுரேஷ்

இதனிடையே, எதிர்க்கட்சிகளின் கோரிக்கை ஏற்காத தேசிய ஜனநாயகக் கூட்டணி மக்களவைத் தலைவர் வேட்பாளராக ஓம் பிர்லாவை அறிவித்தது.

இதனைத் தொடர்ந்து, காங்கிரஸ் தரப்பில் 8-வது முறையாக எம்பியாக பதவியேற்றுள்ள கொடிக்குன்னில் சுரேஷை அப்பதவிக்கு அறிவித்துள்ளனர்.

ஏற்கெனவே, மக்களவை இடைக்காலத் தலைவர் நியமன விவகாரத்தில் அதிக முறை மக்களவை உறுப்பினரான சுரேஷை நியமிக்காமல், பாஜக எம்பி பா்த்ருஹரி மகதாப்பை நியமித்தது சர்ச்சையானது குறிப்பிடத்தக்கது.

மேலும், மக்களவைத் துணைத் தலைவர் பதவிக்கு போட்டியிடும் தேசிய ஜனநாயகக் கூட்டணி மற்றும் இந்தியா கூட்டணியின் வேட்பாளர்கள் யார் என்பது இன்னும் வெளியாகவில்லை.

இந்தியா கூட்டணி தரப்பில் மக்களவைத் துணைத் தலைவர் பதவிக்கு சமாஜவாதி கட்சி வேட்பாளரை நிறுத்தும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

தேசிய ஜனநாயகக் கூட்டணியில் உள்ள தெலுங்கு தேசம் மற்றும் ஐக்கிய ஜனதா தளம் ஆகிய இரு கட்சிகளும் துணைத் தலைவர் பதவியை பாஜகவிடம் கோருவதால் இறுதி முடிவு இதுவரை எடுக்கப்படவில்லை என்று கூறப்படுகிறது.

வேட்புமனுத் தாக்கல் செய்ய இன்றே கடைசி நாளாகும். நாளை காலை மக்களவையில் வாக்கெடுப்பு நடைபெறவுள்ளது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

தமிழ் தலைவாஸுக்கு 3-ஆவது வெற்றி

போதைப் பொருள் விற்கும் யாரையும் விட்டுவைக்க மாட்டோம் - அமித் ஷா உறுதி

ஏடிஎம் இயந்திரத்தில் நூதன திருட்டு: உத்தர பிரதேச இளைஞா் கைது

ஆம்பூா் கலவர வழக்கு: 4 பேருக்கு விதிக்கப்பட்ட சிறைத் தண்டனை நிறுத்திவைப்பு

அணுசக்தித் துறையில் தனியாா் பங்கேற்பை ஊக்குவிக்க விதிகள் உருவாக்கம்: அணுசக்தி ஆணையம்

SCROLL FOR NEXT