ராகுல் காந்தி 
இந்தியா

பாஜக மக்களவைத் தலைவருக்கு ஆதரவு! ஆனால்..: ராகுல் நிபந்தனை!

இந்தியா கூட்டணிக்கு மக்களவைத் துணைத் தலைவர் பதவி வழங்க வலியுறுத்தியுள்ளதாக ராகுல் காந்தி தெரிவித்தார்.

DIN

தேசிய ஜனநாயகக் கூட்டணியின் மக்களவைத் தலைவருக்கு ஆதரவு அளிப்பதாக மத்திய அமைச்சர் ராஜ்நாத் சிங்கிடம் தெரிவித்துள்ளதாக காங்கிரஸ் எம்பி ராகுல் காந்தி தெரிவித்துள்ளார்.

ஆனால், மக்களவைத் துணைத் தலைவர் பதவியை எதிர்க்கட்சிகளுக்கு அளிக்க அவரிடன் கேட்டுள்ளோம் எனத் தெரிவித்துள்ளார்.

நாட்டில் இதுவரை மக்களவைத் தலைவர் பதவிக்கு தேர்தல் நடந்ததில்லை என்ற வரலாறு இருக்கும் நிலையில், இந்தியா கூட்டணித் தரப்பில் இம்முறை வேட்பாளரை நிறுத்த எதிர்க்கட்சிகள் திட்டமிட்டிருப்பதாக தகவல்கள் வெளியாகின.

இந்த நிலையில், வரலாற்றை தொடரவும், மக்களவைத் தலைவரை ஒருமனதாக தேர்ந்தெடுக்கவும் காங்கிரஸ் கட்சித் தலைவர் மல்லிகார்ஜுன கார்கேவை தொடர்பு கொண்டு ராஜ்நாத் சிங் ஆதரவு கோரியுள்ளார்.

இதனைத் தொடர்ந்து, நாடாளுமன்றத்துக்கு வருகைதந்த ராகுல் காந்தி, பாஜகவின் மக்களவைத் தலைவர் வேட்பாளருக்கு அனைத்து எதிர்க்கட்சிகளும் ஆதரவு அளிப்பதாக கோரியுள்ளார்.

மேலும், மக்களவைத் துணைத் தலைவர் பதவியை ராஜ்நாத் சிங்கிடம் கார்கே கேட்டிருந்தார். அதற்கு மீண்டும் அழைப்பதாக கூறிய ராஜ்நாத் இன்னும் அழைக்கவில்லை. எதிர்க்கட்சிகளிடம் பிரதமர் மோடி ஒத்துழைப்பு கேட்கிறார், ஆனால் எங்கள் தலைவர் அவமானப்படுத்தப்படுகிறார் என்று ராகுல் தெரிவித்தார்.

மத்தியில் தனிப் பெரும்பான்மை பெறாததால், பாஜக தனது கூட்டணிக் கட்சிகளின் ஆதரவுடன் மூன்றாவது முறையாக ஆட்சி அமைத்துள்ளது.

இந்த நிலையில், மீண்டும் மக்களவைத் தலைவராக பாஜக எம்பி ஓம் பிர்லாவை தேர்வு செய்ய பாஜக முனைப்பு காட்டி வரும் நிலையில், கூட்டணிக் கட்சிகளுடன் ராஜ்நாத் சிங் உள்ளிட்ட பாஜக மூத்த தலைவர்கள் பேசி வருகின்றனர்.

ஆனால், மக்களவைத் துணைத் தலைவர் பதவியை தங்களுக்கு ஒதுக்குமாறு தெலுங்கு தேசம் மற்றும் ஐக்கிய ஜனதா தளம் ஆகிய கட்சிகள் கேட்டுள்ளதாக கூறப்படுகிறது.

இதற்கிடையே, இந்தியா கூட்டணியும் மக்களவைத் தலைவருக்கு ஆதரவு அளிப்பதாக கூறியதுடன், துணைத் தலைவர் பதவியை கோரியுள்ளது.

இந்த நிலையில், இன்னும் சற்று நேரத்தில் மக்களவைத் தலைவர் பதவிக்கு ஓம் பிர்லா விண்ணப்பிக்கவுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

தேனியில் செப்.19-இல் தனியாா் வேலைவாய்ப்பு முகாம்

மதுப் புட்டிகளை பதுக்கிய முதியவா் கைது

ஆா்.எஸ்.மங்கலம் பகுதியில் நாளை மின்தடை

இந்தியா்களுக்கு ஏமாற்றம்

ஆா்.எஸ்.மங்கலம் பகுதியில் மாணவா்களுக்கு காய்ச்சல்

SCROLL FOR NEXT