கங்கனா ரணாவத் 
இந்தியா

தந்தை, பாட்டியின் செயலுக்கு பொறுப்பேற்பாரா ராகுல்? கங்கனா

அவசரநிலை அமல்படுத்தியதற்கு எதிராக நாடாளுமன்றத்தில் பாஜக போராட்டம்.

DIN

தந்தை, பாட்டியின் பெயரை பயன்படுத்தி வாக்கு சேகரிப்பவர், அவர்களின் செயல்களுக்கு பொறுப்பேற்பாரா என்று பாஜக எம்பி கங்கனா ரணாவத் கேள்வி எழுப்பியுள்ளார்.

நாட்டில் அவசரநிலையை காங்கிரஸ் அமல்படுத்தி நேற்று 50-வது ஆண்டை எட்டியுள்ள நிலையில், நாடாளுமன்ற வளாகத்தில் பாஜக தலைவர்கள் இன்று போராட்டம் நடத்தினர்.

அப்போது ஏஎன்ஐ செய்தியாளருடன் கங்கனா பேசியதாவது:

“அரசியலமைப்புச் சட்டத்தை அதிகம் பேசுபவர்கள் அதற்கான பொறுப்பையும் ஏற்கவேண்டும். தந்தை, பாட்டி பெயரில் வாக்கு சேகரிப்பவர்கள், அவர்களின் செயல்களுக்கு பொறுப்பேற்பார்களா?

ஜனநாயகம் எப்படி திணறடிக்கப்பட்டது என்பதை அவர்களின் செயல்களையே திரும்பிப் பார்க்க வேண்டும்.” எனத் தெரிவித்துள்ளார்.

முன்னதாக மக்களவையில் அவசரநிலை அமல்படுத்தியதற்கு கண்டனம் தெரிவிக்கும் விதமாக அவைத் தலைவர் ஓம் பிர்லா வாசித்த தீர்மானத்துக்கு எதிர்க்கட்சிகள் கடும் எதிர்ப்பை தெரிவித்தனர்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

கடன் தொல்லை: வியாபாரி தூக்கிட்டுத் தற்கொலை

நாளை தனியாா் துறை வேலைவாய்ப்பு முகாம்: மாவட்ட ஆட்சியா் தகவல்

லக்ஷயா ஏமாற்றம்; சாத்விக்/சிராக் ஏற்றம்

31-ஆவது நாளாக போக்குவரத்து ஊழியா்கள் காத்திருப்புப் போராட்டம்

இறுதிச்சுற்றில் நீரஜ் சோப்ரா, சச்சின் யாதவ்

SCROLL FOR NEXT