நாடாளுமன்ற வளாகத்தில் ஆம் ஆத்மி எம்பிக்கள் போராட்டம் | ஸ்வாதி மாலிவால் 
இந்தியா

குடியரசுத் தலைவர் உரையை புறக்கணித்த ஆம் ஆத்மி: ஸ்வாதி மாலிவால் மட்டும் பங்கேற்பு!

ஆம் ஆத்மியின் அறிவிப்பை மீறி அக்கட்சியின் அதிருப்தி எம்பி ஸ்வாதி மாலிவால் மட்டும் பங்கேற்பு.

DIN

தில்லி முதல்வரும் ஆம் ஆத்மி ஒருங்கிணைப்பாளருமான அரவிந்த் கேஜரிவாலின் கைதை கண்டித்து குடியரசுத் தலைவரின் உரையை ஆம் ஆத்மி எம்பிக்கள் புறக்கணிப்பதாக ஆம் ஆத்மி கட்சி அறிவித்திருந்தது.

இந்த நிலையில், ஆம் ஆத்மி கட்சியின் மாநிலங்களவை உறுப்பினர் ஸ்வாதி மாலிவால் மட்டும் கூட்டுக் கூட்டத்தொடரில் பங்கேற்க நாடாளுமன்றத்துக்கு வருகை தந்திருந்தார்.

18-வது மக்களவையின் முதல் கூட்டத்தொடர் நடைபெற்று வரும் நிலையில், இன்று மாநிலங்களவையில் தொடங்கவுள்ளதால் இரு அவைகளின் கூட்டுக் கூட்டத்தில் மரபுப்படி குடியரசுத் தலைவர் உரையாற்றினார்.

இந்த நிலையில், குடியரசுத் தலைவரின் உரை என்பது மத்திய அரசு எழுதிக் கொடுத்ததுதான் என்பதால் அவரின் உரையை புறக்கணிப்பதாக ஆம் ஆத்மியின் சஞ்சய் சிங் இன்று காலை அறிவித்திருந்தார்.

தொடர்ந்து, நாடாளுமன்ற வளாகத்தில் பாதாகைகளுடன் ஆம் ஆத்மி எம்பிக்கள் இன்று காலை போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.

இந்த நிலையில், கேஜரிவாலின் தனி உதவியாளர் பிபவ் குமார் தன்னை தாக்கியதாக காவல்துறையில் புகார் அளித்த கட்சியின் அதிருப்தி எம்பி ஸ்வாதி மாலிவால் மட்டும் கூட்டத்தொடரில் பங்கேற்றார்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

இந்தோனேசியா பாத்தாம் தீவில் தமிழ்ச் சங்கம் சார்பில் பொங்கல் விழா!

உயர்வுடன் தொடங்கி... சில நிமிடங்களில் சரிந்த பங்குச் சந்தை!

மீண்டும் உயர்ந்த தங்கம் - வெள்ளி விலை?

டிரம்ப் - நெதன்யாகுவால் 3 ஆம் உலகப்போர் ஏற்படும்: ஈரான் ராணுவம்

சிறுபான்மையினர் பாதுகாப்பாக வாழும் மாநிலம் தமிழ்நாடு; பாஜக ஆளும் மாநிலங்களில் அவர்களின் நிலை?: கனிமொழி கேள்வி

SCROLL FOR NEXT