ஒடிசாவின், கேந்திரபாரா மாவட்டத்தில் உள்ள கிராமத்தில் இரு குழுக்களுக்கிடையில் நீண்ட காலமாக ஏற்பட்டுவந்த நிலத்தகராறு மோதலில் 52 வயது பெண் ஒருவர் கொல்லப்பட்டார் என்று போலீஸார் தெரிவித்தனர்.
இந்தச் சம்பவம் புதன்கிழமை பிற்பகல் ராஜ்கனிகா காவல் நிலையப் பகுதியில் உள்ள சங்க்ராம்பூர் கிராமத்தில் நடந்ததாகவும், உயிரிழந்தவர் சுசீலா நாயக் (52) என்றும் அடையாளம் காணப்பட்டுள்ளார்.
நிலம் தொடர்பாக இரு குழுக்களுக்கிடையே ஏற்பட்ட மோதலில் மரப்பலகையால் தாக்கப்பட்டதில் பெண் ஒருவர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். எட்டு பேர் காயமடைந்தடைந்த நிலையில் கேந்திரபாரா மாவட்ட மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனர்.
பின்னர், அவர்களில் இருவரின் நிலை மோசமடைந்ததால் கட்டாக்கி உள்ள எஸ்சிபி மருத்துவக் கல்லூரி மற்றும் மருத்துவமனைக்கு மாற்றப்பட்டதாக போலீஸார் தெரிவித்தனர்.
சொத்து தகராறு காரணமாக இந்த வன்முறை நடந்திருக்கலாம் என ராஜ்கனிகா காவல் நிலைய ஆய்வாளர் திலீப் தெரிவித்துள்ளார். மோதலுக்கான சரியான காரணம் விசாரிக்கப்பட்டு வருகிறது. இதுதொடர்பான மூன்று பேரை கைது செய்துள்ளோம், மற்ற குற்றவாளிகள் கிராமத்தை விட்டு தப்பி ஓடிவிட்டதாகவும் கூறினர்.
பல்வேறு சட்டங்களில் கீழ் வழக்குப் பதிவு செய்யப்பட்டு விசாரணை போலீஸார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.