மனதின் குரல் நிகழ்ச்சியின் மூலம் பிரதமர் மோடி மக்களுடன் உரையாற்றினார்.
ஒவ்வொரு மாதமும் இறுதி ஞாயிற்றுக்கிழமையன்று வானொலி மூலம் ஒலிபரப்பப்படும் ’மனதின் குரல்’ நிகழ்ச்சி, மக்களவைத் தேர்தலையொட்டி கடந்த 4 மாதங்களுக்கும் மேலாக நிறுத்திவைக்கப்பட்டிருந்தது.
இந்த நிலையில், ’மனதின் குரல்’ நிகழ்ச்சி மூலம் நாட்டு மக்களுடன் பிரதமர் மோடி இன்று(ஜூன் 30) உரையாற்றினார்.
அவர் பேசியதாவது: இந்திய கலாசாரம் உலகளவில் புகழடைந்து வருவது, நம் ஒவ்வொருவருக்கும் பெருமை. அரசமைப்பின் மீதும் ஜனநாயக செயல்பாட்டின் மீதும் அசைக்கமுடியாத நம்பிக்கையை மக்கள் வைத்துள்ளனர் என்பதை தேர்தலில் வெளிக்காட்டியுள்ளனர்.
சுமார் 1.5 லட்சம் பழங்குடியின குடும்பங்கள் அரக்கு காஃபி பயிர் விளைச்சல் மற்றும் அதைச் சார்ந்த பணிகளில் ஈடுபட்டுள்ளனர். கிரிஜான் கூட்டுறவுச் சங்கம் மூலம் விவசாயிகளை ஊக்கப்படுத்தி, அரக்கு காஃபி பியிரிடுதலில் ஈடுபட நடவடிக்கை எடுக்கப்பட்டது. இதன்மூலம் விவசாயிகளின் வருவாய் உயர்ந்தது. ஒருமுறை நான் விசாகப்பட்டினம் சென்றிருந்தபோது, ஆந்திர பிரதேச முதல்வர் சந்திரபாபு நாயுடுவுடன் அரக்கு காஃபியை பருகும் வாய்ப்பு கிட்டியது எனக் குறிப்பிட்டுப் பேசியுள்ளார் மோடி.
பாரிஸ் நகரில் விரைவில் தொடங்கவுள்ள ஒலிம்பிக் போட்டிகளில் இந்திய வீரர்கள் மிகச்சிறப்பான செயல்படுவார்கள் என்று எதிர்பார்ப்பதாகவும் அவர் கூறியுள்ளார். மக்கள் அனைவரும் ’சியர்ஃபார்பாரத்’ என்ற ஹேஷ்டேக்கை பயன்படுத்தி வீரர்களை உற்சாகப்படுத்தவும் அவர் வலியுறுத்தியுள்ளார்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.