மைசூருவில் திரைப்பட நகரம்: முதல்வர் சித்தராமையா
100 ஏக்கர் நிலத்தில் மைசூருவில் உருவாகும் திரைப்பட நகரம்
மைசூருவில் திரைப்பட நகரத்தை உருவாக்க தனது அரசு உறுதிபூண்டுள்ளதாக முதல்வர் சித்தராமையா தெரிவித்துள்ளார்.
கன்னடத் திரைப்படத் தயாரிப்பாளர் சங்கத்தின் புதிய கட்டடத்தைத் திறந்து வைத்த பின் செய்தியாளர்களிடம் பேசிய அவர், திரைப்பட நகரத்துக்காக மைசூருவில் 100 ஏக்கர் நிலத்தை எங்கள் அரசு வழங்கியது.
தனியார் பங்களிப்புடன் திரைப்பட நகரம் கட்டப்படும். கன்னடத் திரையுலகிற்கு திரைப்பட நகரம் வேண்டும் என்பது மறைந்த ராஜ்குமாரின் கனவு.
Advertisement
Advertisement
அதனை அவரது அரசு நிறைவேற்றும். திரைப்பட நகரத்துக்கு முந்தைய பாஜக அரசு எதுவும் செய்யவில்லை.
மேலும் கன்னட ஓடிடி தளம் குறித்து பரிசீலனை செய்து உரிய நடவடிக்கை எடுக்கப்படும் எனவும் திரைப்பட தயாரிப்பாளர்களிடம் அவர் உறுதியளித்தார்.
கருத்துகள்
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.