இந்தியா

தகவல் தொழில்நுட்பத் துறை பிப்ரவரியில் மேற்கொண்ட ஆள்குறைப்பு இவ்வளவா?

தகவல் தொழில்நுட்பத் துறை பிப்ரவரியில் மேற்கொண்ட ஆள்குறைப்பு இவ்வளவா?

DIN

தகவல்தொழில்நுட்பத் துறை, கடந்த பிப்ரவரி மாதம் மிகப்பெரிய ஆள்குறைப்பு நடவடிக்கையை எடுத்திருப்பதாக புள்ளிவிவரங்கள் காட்டுகின்றன.

மிகப்பெரிய நிறுவனங்கள் முதல் சிறிய நிறுவனங்கள் வரை இந்த ஆள்குறைப்பை மேற்கொண்டுள்ளன.

பிப்ரவரி மாதத்தில் மட்டும் சுமார் 15 ஆயிரம் பேர் பணியிலிருந்து நீக்கப்பட்டு ஆள்குறைப்பு மேற்கொள்ளப்பட்டிருப்பதாகவும், இதன் மூலம் 2024ஆம் ஆண்டு நடந்த மொத்த ஆள்குறைப்பு எண்ணிக்கை 50 ஆயிரமாக இருப்பதாகவும் புள்ளிவிவரங்கள் காட்டுகின்றன.

சிஸ்கோ நிறுவனம் கடந்த பிப்ரவரியில் 4,250 ஆள்குறைப்பு நடவடிக்கையில் ஈடபட்டிருக்கிறது. எக்ஸ்பீடியா 1500 பணியிடங்களையும், சோனி 900 ஊழியர்களையும் பணிநீக்கம் செய்திருக்கிறது.

அமேசான் 400 பணியிடங்களையும், ஸ்நேப் 500 பணியிடங்களையும் பாராமௌண்ட் 850 பணியிடங்களையும் குறைத்திருக்கிறது.

கடந்த ஜனவரியில் அதிகமாக இருந்த இந்த பணி நீக்க எண்ணிக்கை, பிப்ரவரியில் சற்று குறைந்திருந்தாலும், இதுவரை 2024ஆம் ஆண்டில் பணி நீக்கம் செய்யப்பட்டோர் எண்ணிக்கை 49 ஆயிரத்தைத் தொட்டுவிட்டதாகக் கூறப்படுகிறது

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

ஜூனில் 9 சதவீதம் சரிந்த தேயிலை உற்பத்தி

வத்தலக்குண்டு, நத்தம் பகுதி கோயில்களில் பக்தா்கள் தலையில் தேங்காய் உடைத்து நோ்த்திக்கடன்

கால்வாயில் நீரில் மூழ்கிய தொழிலதிபரின் உடலை தேடும் பணி மும்முரம்

கடனை திருப்பித் தராத காவலா் மீது மூதாட்டி புகாா்

ரெங்கநாதபுரம் பகுதியில் இன்று மின்தடை

SCROLL FOR NEXT