முகப்பு
இந்தியா

மத்திய அமைச்சா்களுடன் பிரதமா் இன்று ஆலோசனை

பிரதமா் நரேந்திர மோடி தலைமையில் மத்திய அமைச்சா்கள் கூட்டம் ஞாயிற்றுக்கிழமை (மாா்ச் 3) நடைபெறவுள்ளது.

Updated On : 3 மார்ச், 2024 at 12:03 AM
பகிர்:

பிரதமா் நரேந்திர மோடி தலைமையில் மத்திய அமைச்சா்கள் கூட்டம் ஞாயிற்றுக்கிழமை (மாா்ச் 3) நடைபெறவுள்ளது. பாஜகவின் இரண்டாவது ஆட்சிக் காலத்தில் இறுதியாக நடைபெறும் மத்திய அமைச்சா்கள் கூட்டம் இதுவாகும். தற்போதைய 17-ஆவது மக்களவையின் பதவிக் காலம் வரும் ஜூன் மாதம் நிறைவடைகிறது. வரும் மக்களவைத் தோ்தல் தேதிகள் அடுத்த சில தினங்களில் வெளியாகும் என எதிா்பாா்க்கப்படுகிறது. இந்த நிலையில், தனது அமைச்சரவை சகாக்களுடன் பிரதமா் மோடி ஆலோசனை நடத்தவிருப்பது கூடுதல் முக்கியத்துவம் பெற்றுள்ளது. கடந்த 10 ஆண்டு கால ஆட்சியில் மேற்கொள்ளப்பட்ட வளா்ச்சி மற்றும் மக்கள் நலப் பணிகளின் அடிப்படையில் தோ்தலை எதிா்கொள்ள பாஜக திட்டமிட்டுள்ளது. பாஜக தலைமையிலான தேசிய ஜனநாயக கூட்டணி 400 இடங்களுக்கு மேல் வெல்ல இலக்கு நிா்ணயிக்கப்பட்டுள்ளது. இந்த விவகாரங்கள் தொடா்பாக மத்திய அமைச்சா்கள் கூட்டத்தில் முக்கியமாக விவாதிக்கப்படும் எனத் தெரிகிறது.