ஜார்க்கண்டில் கொடூரம்: ஸ்பானியப் பெண் கூட்டு பாலியல் வன்கொடுமை
ஜார்க்கண்டில் ஸ்பானியப் பெண் கூட்டு பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டுள்ளார்.
ராஞ்சி: ஜார்க்கண்ட் மாநிலம் தும்கா மாவட்டத்துக்கு சுற்றுலா வந்திருந்த ஸ்பானிய நாட்டுப் பெண் கூட்டுப் பாலியல் வன்கொடுமைக்கு உள்ளாக்கப்பட்டுள்ளார்.
குருமஹத் பகுதியில் வெள்ளிக்கிழமை இரவு இந்த சம்பவம் நடந்துள்ளது.
இது குறித்து வெளியான தகவலில், பாதிக்கப்பட்ட ஸ்பானிய நாட்டுப் பெண் தனது கணவருடன் இருசக்கர வாகனத்தில் சென்றுகொண்டிருந்தபோது, 8 முதல் 10 பேர் கொண்ட கும்பல், தங்களை வழிமறித்து, தன்னை இழுத்துச் சென்று ஆளில்லாத இடத்தில் பாலியல் பலாத்காரம் செய்ததாகக் கூறப்படுகிறது.
இந்த சம்பவத்தில் தொடர்புடைய 3 பேரை காவல்துறையினர் கைது செய்துள்ளனர். இது குறித்து காவல்துறை தரப்பில் கூறப்படுவது என்னவென்றால், இரவு ரோந்து வாகனத்தை இந்தப் பெண் உதவி கேட்டு நிறுத்தியிருக்கிறார். அப்போது அவரது உடலில் காயங்கள் இருந்துள்ளன. காவல்துறையினர் மருத்துவமனையில் அனுமதித்து வழக்குப் பதிவு செய்துள்ளனர்.