மத்தியப்பிரதேசத்தில் ராகுல் காந்தியின் நடைபயணம்  படம் | ஜெய்ராம் ரமேஷ் எக்ஸ்(டிவிட்டர்) தளப் பதிவு
இந்தியா

பிகார்: ராஷ்டிரிய ஜனதா தள பேரணியில் ராகுல் காந்தி பங்கேற்பு!

ராகுல் காந்தியின் ’இந்திய ஒற்றுமை நீதி யாத்திரை’ இன்றுடன் 50-வது நாளை நிறைவு செய்கிறது.

DIN

ராகுல் காந்தியின் ’இந்திய ஒற்றுமை நீதி யாத்திரை’ இன்றுடன் 50-வது நாளை நிறைவு செய்ய உள்ள நிலையில், பிகார் தலைநகர் பாட்னாவில் இன்று(மார்ச்.3) நடைபெறும் ஆர்ஜேடி கட்சியின் பேரணியில் ராகுல்காந்தி கலந்துகொள்ள உள்ளார்.

ராகுல் காந்தியின் ’இந்திய ஒற்றுமை நீதி யாத்திரை’ நேற்று(மார்ச்.2) மத்தியப் பிரதேசத்தில் நுழைந்தது. மத்தியப் பிரதேசத்தின் ஷிவ்புரியில் ராகுலின் நடைபயணத்திற்கு உற்சாக வரவேற்பு அளிக்கப்பட்டது.

இதனைத்தொடர்ந்து, இன்று காலை, பாட்னாவுக்கு புறப்பட்ட ராகுல் காந்தி, அங்கு ஆர்ஜேடி கட்சியின் பேரணியில் கலந்துகொள்ள உள்ளார்.

பிகாரில் ராஷ்டிரிய ஜனதா தள(ஆர்ஜேடி) கட்சியின் மெகா பேரணியில் காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி கலந்துகொள்வார் என்று காங்கிரஸ் பொதுச்செயலாளர் ஜெய்ராம் ரமேஷ் தெரிவித்துள்ளார்.

இந்த பேரணியில் சமாஜவாதி கட்சித் தலைவர் அகிலேஷ் யாதவ், காங்கிரஸ் கட்சியின் தலைவர் மல்லிகார்ஜுன கார்கே மற்றும் தேஜஸ்வி யாதவ் ஆகியோரும் கலந்துகொள்ள உள்ளனர் என்று ஜெய்ராம் ரமேஷ் தெரிவித்துள்ளார்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

ரூ.75 ஆயிரம் கோடி! அமெரிக்கா - ஆஸ்திரேலியா இடையே கனிம வள ஒப்பந்தம்!

மெக்சிகோ வெள்ளம்: பலி எண்ணிக்கை 76 ஆக அதிகரிப்பு! ரூ.4.8 ஆயிரம் கோடி நிவாரணம்!

பிகாரில் முதற்கட்ட தேர்தலில் 61 வேட்பாளர்கள் வாபஸ்!

மகளிர் உலகக் கோப்பை: வங்கதேசத்தை வீழ்த்தியது இலங்கை!

பழம்பெரும் நடிகர் அஸ்ரானி காலமானார்!

SCROLL FOR NEXT