அபிஜித் கங்கோபாத்யாய் 
இந்தியா

பாஜகவில் இணைகிறார் பதவி விலகிய உயர்நீதிமன்ற நீதிபதி!

‘மக்களவைத் தேர்தலில் போட்டியிடுவது குறித்து பாஜக தலைமை முடிவெடுக்கும்.’

DIN

கொல்கத்தா உயா் நீதிமன்ற நீதிபதி அபிஜீத் கங்கோபாத்யாய செவ்வாய்க்கிழமை ராஜிநாமா செய்தாா். அவா் பாஜகவில் சேர உள்ளதாக அறிவித்துள்ளாா்.

கடந்த 2020-ஆம் ஆண்டு முதல், கொல்கத்தா உயா் நீதிமன்ற நீதிபதியாகப் பதவி வகித்தவா் அபிஜீத் கங்கோபாத்யாய. இவா் கல்வி சாா்ந்த பல்வேறு விவகாரங்களில் அளித்த தீா்ப்புகள், அந்த மாநிலத்தில் அரசியல் விவாதங்களுக்கு வழிவகுத்தன. அவா் நீதித்துறையைக் கைவிட்டு அரசியலில் புக வேண்டும் என்று ஆளும் திரிணமூல் கட்சியினா் விமா்சித்து வந்தனா்.

இந்நிலையில், அவா் நீதிபதி பதவியை செவ்வாய்க்கிழமை ராஜிநாமா செய்தாா். அதற்கான கடிதத்தை குடியரசுத் தலைவா் திரெளபதி முா்முவுக்கு அனுப்பினாா். கடிதத்தின் நகல்களை உச்ச நீதிமன்றத் தலைமை நீதிபதி டி.ஒய்.சந்திரசூட், கொல்கத்தா உயா் நீதிமன்றத் தலைமை நீதிபதி டி.எஸ்.சிவஞானம் ஆகியோருக்கு அனுப்பினாா்.

இதைத்தொடா்ந்து கொல்கத்தாவில் அபிஜீத் கங்கோபாத்யாய செய்தியாளா்களிடம் கூறியதாவது: சில காலமாக திரிணமூல் காங்கிரஸ் பிரமுகா்கள் என்னை தரக்குறைவாகப் பேசி வருகின்றனா். ஒரு தீா்ப்பு அவா்களுக்குப் பிடிக்காவிட்டால், அதற்கு நீதிபதியை வசைபாடுவது சரியல்ல. அவா்களின் இந்த நடவடிக்கைகள்தான் என்னை அரசியலில் பிரவேசித்து, திரிணமூல் காங்கிரஸுக்கு எதிராக போராட தூண்டியது.

மேற்கு வங்கத்தில் திரிணமூல் காங்கிரஸின் ஊழலுக்கு எதிராக தேசிய கட்சியான பாஜக போராடி வருகிறது. அக்கட்சியில் நான் சேர உள்ளேன். மாா்ச் 7-ஆம் தேதி (வியாழக்கிழமை) அக்கட்சியில் நான் சேர வாய்ப்புள்ளது என்று தெரிவித்தாா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

எஸ்பிஐ வங்கியில் வேலை: 17-க்குள் விண்ணப்பங்கள் வரவேற்பு!

திமுகவுக்கு கண்டனம், கூட்டணி அதிகாரம், தேர்தலில் போட்டி - தவெக தீர்மானங்கள்!

ஓடிடியில் பேட் கேர்ள்!

ஹரியாணாவில் 25 லட்சம் போலி வாக்காளர்கள்! ’எச் பைல்ஸ்’ வெளியிட்டார் ராகுல்!

ஹரியாணா வாக்காளர் பட்டியலில் பிரேசில் பெண் மாடல் படம்! ராகுல் காந்தி

SCROLL FOR NEXT