இந்தியா

கேமராவுக்காக இளைஞர் கொலை; குற்றவாளிகளைக் காட்டிக்கொடுத்த புகைப்படங்கள்

DIN

விசாகப்பட்டினம்: ஆந்திர மாநிலம் விசாகப்பட்டினம் அருகே, 23 வயது இளைஞர் அவரது ரூ.15 லட்சம் மதிப்புள்ள கேமராவுக்காக கொடூரமாகக் கொலை செய்யப்பட்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியிருக்கிறது.

சாய் விஜய் பவன்கல்யாண், புகைப்படம் எடுப்பதில் ஆர்வம் அதிகரித்து, அதற்காக ரூ.15 லட்சம் மதிப்புள்ள கேமராவை வாங்கியுள்ளார்.

அவர் எடுத்த புகைப்படங்களை இன்ஸ்டாவில் பதிவிட்டும் வந்துள்ளார். அதனைப் பார்த்த தேஜா என்ற இளைஞர், கேமராவை திருடும் நோக்கத்தோடு, பவன்கல்யாணை தொடர்பு கொண்டு, தங்களை புகைப்படம் எடுக்க வேண்டும் என்று கேட்டுள்ளார்.

பவன்கல்யாணும், புகைப்படம் எடுக்க அவர்கள் சொன்ன இடத்துக்குச் சென்ற போது, தேஜாவும் அவரது நண்பரும் சேர்ந்து பவன் கல்யாண் கழுத்தை நெறித்துக் கொன்று, உடலை புதைத்துவிட்டு கேமராவைத் திருடிச் சென்றுள்ளனர்.

பவன்கல்யாண் மாயமானது குறித்து விசாரணை நடத்திய காவல்துறையினர், சந்தேகத்தின் பேரில் தேஜா மற்றும் அவரது நண்பரை கைது செய்து விசாரித்தனர். அப்போது, இருவரும் விலை உயர்ந்த கேமராவுக்காக கொலை செய்ததை ஒப்புக் கொண்டனர்.

முன்னதாக, அவர்கள் காணாமல் போன பவன்கல்யாணின் புகைப்படத்தில் எடுத்த புகைப்படங்களை தங்களது முகநூல் பக்கத்தில் பகிர்ந்திருந்ததாகவும், இதன் மூலம் இவர்கள்தான் உண்மையான குற்றவாளிகள் என்று அடையாளம் காணப்பட்டதாகவும் தகவல்கள் தெரிவிக்கின்றன.

இந்த சம்பவம், இதுபோல பணியாற்றுபவர்களின் பாதுகாப்பை கேள்விக்குறியாக்கியிருக்கிறது என்று புகைப்பட கலைஞர்கள் கவலை தெரிவித்திருக்கிறார்கள்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

புதுவையில் 10-ஆம் வகுப்பு தோ்வு முடிவுகள் இன்று வெளியீடு

வங்கதேச இளம்பெண்ணுக்கு சென்னையில் மூட்டு சீரமைப்பு

பெண் கடத்தல் வழக்கு: எச்.டி.ரேவண்ணாவுக்கு ஜாமீன்?

கன்னியாகுமரி அருகே மருந்துவாழ்மலையில் தீ

நீலகிரி, கொடைக்கானல்: இதுவரை 1.11 லட்சம் வாகனங்களுக்கு இ-பாஸ்

SCROLL FOR NEXT