சமையல் எரிவாயு மானிய திட்டம் நீட்டிப்பு!
சமையல் எரிவாயு திட்ட மானியத்தை நீட்டிக்க மத்திய அமைச்சரவைக் கூட்டத்தில் ஒப்புதல் அளிக்கப்பட்டுள்ளது.
பிரதமர் நரேந்திர மோடியின் தலைமையில் நடைபெற்ற மத்திய அமைச்சரவைக் கூட்டத்தில் சமையல் எரிவாயு திட்ட மானியத்தை நீட்டிப்பதற்கு ஓப்புதல் வழங்கப்பட்டுள்ளது.
சமையல் எரிவாயு திட்ட மானியத்தை ஒராண்டுக்கு நீட்டிக்க மத்திய அமைச்சரவைக் கூட்டத்தில் ஒப்புதல் அளிக்கப்பட்டுள்ளது.
உஜ்வாலா யோஜனா பயனாளிக்கு எரிவாயு சிலிண்டருக்கு ரூ. 300 மானியம் வழங்கும் திட்டம் நீட்டிக்கப்பட்டுள்ளது. சமையல் எரிவாயு மானிய திட்டத்திற்கு ரூ.12,000 கோடி மத்திய அரசு ஒதுக்கியுள்ளதாக மத்திய அமைச்சர் பியூஷ் கோயல் தெரிவித்தார்.
Advertisement
Advertisement
மேலும், மத்திய அரசு ஊழியர்கள் மற்றும் ஓய்வூதியதாரர்களுக்கு 4% அகவிலைப்படி உயர்த்தவும் மத்திய அமைச்சரவைக் கூட்டத்தில் முடிவெடுக்கப்பட்டுள்ளது.
ஜனவரி 1, 2024 முதல் அகவிலைப்படியை 4% உயர்த்த மத்திய அமைச்சரவை ஒப்புதல் அளித்துள்ளதாக மத்திய அமைச்சர் பியூஷ் கோயல் தெரிவித்தார்.
கருத்துகள்
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.