மாதிரி படம் 
இந்தியா

பட்டயக் கணக்கியல் தேர்வுகளில் புதிய மாற்றம்: மாணவர்களுக்கு பயனளிக்குமா?

சிஏ தேர்வுகள்: ஆண்டுக்கு மூன்று முறை எழுதும் வாய்ப்பு - மாணவர் வெற்றிக்கு புதிய பாதை

DIN

இந்திய பட்டயக் கணக்காளர்கள் அமைப்பு (ஐசிஏஐ) கவுன்சில் கூட்டத்தில் புதிய தேர்வு முறை திட்டமிடப்பட்டுள்ளது.

சிஏ எனப்படும் பட்டயக் கணக்காளருக்கான படிநிலைகள் பவுண்டேஷன் மற்றும் இண்டர் ஆகிய இரண்டு நிலைகளுக்கான தேர்வுகள் ஆண்டுதோறும் மே/ஜூன் மற்றும் டிசம்பர் என இரண்டு முறை நடத்தப்படும்.

இனி மாணவர்கள் ஆண்டில் மூன்று முறை ஜனவரி, மே/ஜூன் மற்றும் செப்டம்பர் மாதங்களில் இந்த தேர்வுகளை எழுதும் வாய்ப்பு பெறுவார்கள் என ஐசிஏஐ அறிவித்துள்ளது.

இந்த மாற்றம் மாணவர்களுக்கு பயனளிக்கும் எனவும் அவர்களின் வெற்றிக்கான வாய்ப்புகளை அதிகரிக்கும் எனவும் ஐசிஏஐ மத்திய கவுன்சில் உறுப்பினர் தீரஜ் கண்டேல்வால் எக்ஸ் பக்கத்தில் தெரிவித்துள்ளார்.

இது குறித்து முழுமையான விவரங்கள் விரைவில் ஐசிஏஐ சார்பில் வெளியிடப்படும் என அவர் தெரிவித்துள்ளார்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

டிரெண்டிங் படத்தின் ஓடிடி வெளியீட்டுத் தேதி!

அறிவியல்,பொறியியல் பட்டதாரிகளுக்கு சயின்டிஸ்ட் பணி: விண்ணப்பிப்பது எப்படி?

தலைவா முகத்தைப் பார்க்கணும்... ரஜினியால் ரசிகர்கள் உற்சாகம்!

நட்பு ரீதியான போட்டியில் சரமாரியாகத் தாக்கிக்கொண்ட கால்பந்து வீரர்கள்!

ரயில்வேயில் வேலை வேண்டுமா?: விளையாட்டு வீரர்களுக்கு வாய்ப்பு!

SCROLL FOR NEXT