கோப்புப் படம். 
இந்தியா

ஒடிசா: முதலை தாக்கியதில் இளைஞர் பலி

DIN

ஒடிசாவில் முதலை தாக்கி 34 வயது இளைஞர் பலியான நிகழ்வு சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

ஒடிசா மாநிலம், பிதர்கனிகா தேசிய பூங்காவின் புறநகரில் உள்ள தகினாபேடா கிராமத்தில் காலை 8.30 மணியளவில் நிமாய் மல்லிக் தனது வயலுக்கு ஆற்றில் இருந்து வாளி மூலம் தண்ணீர் எடுத்து ஊற்றிக்கொண்டிருந்தார்.

அப்போது அந்த ஆற்றில் இருந்த முதலை ஒன்று அவரை கடித்து உள்ளே இழுத்துச் சென்றது.

இதில் அவர் பலியானார். சில மணி நேரங்களுக்குப் பிறகு, பாதி நிலையில் அவரது உடலை ஆற்றில் இருந்து வனக் காவலர்கள் மற்றும் தீயணைப்புப் படையினர் மீட்டனர்.

முதலைத் தாக்கி பலியான நிமாய் மல்லிக்கிற்கு மனைவி, மூன்று மகள்கள் மற்றும் ஒரு மகன் உள்ளனர் என்று வனத்துறை அதிகாரி ஒருவர் தெரிவித்தார்.

கடந்த சில மாதங்களில் நடந்த ஏழாவது மரணம் இதுவாகும்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

மூட்டம் (சிறுகதைகள்)

சிவாஜியும் கண்ணதாசனும்

திரையெல்லாம் செண்பகப்பூ

கடியலூர் உருத்திரங்கண்ணனாரின் பட்டினப்பாலை (ஆய்வுரை)

பாகிஸ்தானில் மிதமான நிலநடுக்கம்

SCROLL FOR NEXT