படம் | பிரிஜேந்திர சிங் எக்ஸ் தளம்
இந்தியா

ஹரியாணா: ஹிசார் தொகுதி எம்.பி. பாஜகவிலிருந்து விலகுவதாக அறிவிப்பு!

ஹரியாணாவை சேர்ந்த பாஜக எம்.பி. பிரிஜேந்திர சிங், பாஜகவின் அடிப்படை உறுப்பினர் பொறுப்பிலிருந்து திடீரென விலகியிருப்பது அக்கட்சியினர் மத்தியில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

DIN

ஹரியாணாவை சேர்ந்த பாஜக எம்.பி. பிரிஜேந்திர சிங், பாஜகவின் அடிப்படை உறுப்பினர் பொறுப்பிலிருந்து திடீரென விலகியிருப்பது அக்கட்சியினர் மத்தியில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

மக்களவைத் தேர்தல் நெருங்கிவிட்ட நிலையில், பாஜகவிலிருந்து விலகிய எம்.பி. பிரிஜேந்திர சிங், காங்கிரஸ் கட்சியில் இணையப் போவதாக அவருக்கு நெருங்கிய வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

ஹிசார் தொகுதி எம்.பி.யான பிரிஜேந்திர சிங், தான் பாஜகவில் இருந்து விலகியிருப்பதை தனது சமூக வலைதள பக்கங்களில் பதிவிட்டு உறுதிசெய்து உள்ளார். இதுகுறித்து அவர் பதிவிட்டுள்ளதாவது, அரசியல் அழுத்தம் காரணமாக பாஜகவின் அடிப்படை உறுப்பினர் பதவியை ராஜிநாமா செய்துள்ளேன்.

ஹிசார் நாடாளுமன்ற உறுப்பினராக பணியாற்ற எனக்கு வாய்ப்பளித்ததற்காக கட்சிக்கும், கட்சியின் தேசியத் தலைவர் ஜெபி. நட்டா, பிரதமர் நரேந்திர மோடி மற்றும் அமித் ஷா ஆகியோருக்கும் நன்றியை தெரிவித்துக் கொள்கிறேன் என்று குறிப்பிட்டுள்ளார்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

யுசிஎல்: ரியல் மாட்ரிட்காக இளம் வயதில் களமிறங்கி சாதனை! அடுத்த மெஸ்ஸியா?

டாலருக்கு நிகரான ரூபாய் மதிப்பு 25 காசுகள் உயர்ந்து ரூ.87.84 ஆக நிறைவு!

அண்ணாயிஸத்தை அடிமையிஸமாக்கியவர் இபிஎஸ்: முதல்வர் மு.க. ஸ்டாலின்

மெல்லிசையே.. கௌரி கிஷன்!

கர்ஜனை மொழி கனிமொழி, செயல் வீரர் செந்தில் பாலாஜி: மு.க. ஸ்டாலின் புகழாரம்!

SCROLL FOR NEXT