காலமானார் முன்னாள் எம்எல்ஏ கு.லிங்கமுத்து
குடியாத்தம் (தனி) தொகுதி முன்னாள் எம்எல்ஏ, இந்திய கம்யூனிஸ்ட் கட்சியைச் சேர்ந்த கு. லிங்கமுத்து (73) இன்று காலமானார்.
குடியாத்தம் (தனி) தொகுதி, முன்னாள் சட்டப் பேரவை உறுப்பினர், இந்திய கம்யூனிஸ்ட் கட்சியைச் சேர்ந்த கு. லிங்கமுத்து (73) வெள்ளிக்கிழமை (பிப். 6) வீட்டில் காலமானார்.
இவரது சொந்த ஊர் குடியாத்தம் ஒன்றியம், செட்டிகுப்பம் கிராமம். விவசாய குடும்பத்தைச் சேர்ந்த இவர் 1953- இல் பிறந்தார். எஸ்எஸ்எல்சி வரை படித்தவர். கம்யூனிஸ்ட் கட்சி மீது பற்றுகொண்டு, 1976-ல் கட்சியில் இணைந்து, கட்சியின் பல்வேறு பொறுப்புகளை வகித்தார்.
1986 மற்றும் 1996-ல் நடந்த உள்ளாட்சித் தேர்தல்களில் செட்டிகுப்பம் ஊராட்சித் தலைவர் பதவிக்குப் போட்டியிட்டு வெற்றிபெற்றவர். 2006-ல் நடைபெற்ற உள்ளாட்சித் தேர்தலில் ஒன்றியக் குழு உறுப்பினராகவும் தேர்ந்தெடுக்கப்பட்டார்.
Advertisement
Advertisement
2011- இல் குடியாத்தம் (தனி) தொகுதிக்கு நடைபெற்ற பேரவைத் தேர்தலில் கதிர், அரிவாள் சின்னத்தில் போட்டியிட்டு வெற்றி பெற்றார். பதவிக் காலத்தில், கட்சி பாகுபாடின்றி அனைத்து தரப்பினருடன் எளிமையாக பழகியவர். தொகுதி மக்களின் நன்மதிப்பை பெற்றவர். தற்போது கட்சியின் மாநிலக் குழு உறுப்பினர் பதவியில் இருந்தார். கடந்த சில மாதங்களாக உடல் நலம் குன்றியிருந்தார்.
இவரது நல்லடக்கம் சனிக்கிழமை (பிப். 7) பிற்பகல் செட்டிகுப்பம் கிராமத்தில் நடைபெறும். இவருக்கு லதா என்ற மனைவியும், முத்தமிழ் என்ற மகளும், நிறைமதி செல்வன் என்ற மகனும் உள்ளனர்.
தொடர்புக்கு. 99651 88207, 87784 79407.
Gudiyatham Former MLA Lingamuthu passed away due to ill health
கருத்துகள்
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.