DOTCOM
இந்தியா

காங்கிரஸில் இணைந்தார் மேலுமொரு பாஜக எம்பி!

கடந்த 24 மணிநேரத்தில் பாஜகவின் இரண்டு எம்பிக்கள் காங்கிரஸில் இணைந்துள்ளனர்.

DIN

ராஜஸ்தான் மாநிலம் சுரு தொகுதியின் பாஜக எம்பியாக இருக்கும் ராகுல் கஸ்வான், அக்கட்சியில் இருந்து விலகி காங்கிரஸில் திங்கள்கிழமை இணைந்துள்ளார்.

பாரதிய ஜனதா கட்சி சார்பில் ராஜஸ்தானின் சுரு தொகுதியில் போட்டியிட்டு தொடர்ந்து 10 ஆண்டுகளாக மக்களவை உறுப்பினராக இருப்பவர் ராகுல் கஸ்வான்.

இவருக்கும் வரும் மக்களவைத் தேர்தலில் போட்டியிட பாஜக வாய்ப்பளிக்காத நிலையில், அக்கட்சியில் இருந்து விலகி இன்று காங்கிரஸ் தலைவர் மல்லிகார்ஜுன கார்கே முன்னிலையில் இணைந்துள்ளார்.

காங்கிரஸில் இணைந்த ராகுல் கஸ்வான், “கடந்த 10 ஆண்டுகள் மக்களுக்கு சேவையாற்ற வாய்ப்பளித்த பிரதமர் நரேந்திர மோடிக்கு நன்றி. விவசாயிகளின் குரல் புறக்கணிப்பு உள்ளிட்ட பல பிரச்னைகளால், நான் காங்கிரஸில் சேர முடிவு செய்தேன்.” எனத் தெரிவித்துள்ளார்.

முன்னதாக, ஹரியாணாவை சேர்ந்த பாஜக எம்.பி. பிரிஜேந்திர சிங் அக்கட்சியில் இருந்து விலகி காங்கிரஸில் இணைந்தது குறிப்பிடத்தக்கது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

தேசிய விருது பெற்ற கிங் கான்! சிறந்த நடிகராக ஜவான் ஷாருக்!

சிறந்த தமிழ் திரைப்படம், சிறந்த திரைக்கதை, சிறந்த துணை நடிகர் என 3 தேசிய விருதுகளை வென்ற Parking!

மின்சார உதிரிப் பாகங்கள் தயாரிப்பு நிறுவனம் மூடல்:ஊழியர்கள் டவர் மீது ஏறிப் போராட்டம்!

முதல்முறையாக தேசிய விருது: சிறந்த நடிகையாக ராணி முகர்ஜி!

டாலருக்கு நிகரான ரூபாய் மதிப்பு 12 காசுகள் உயர்ந்து ரூ.87.53 ஆக நிறைவு!

SCROLL FOR NEXT