இந்தியா

வேட்பாளர்கள் யார்? காங். மத்திய தேர்தல் குழு ஆலோசனை!

மக்களவைத் தேர்தலில் போட்டியிடவுள்ள வேட்பாளர்கள் குறித்து இந்தக் கூட்டத்தில் ஆலோசிக்கப்பட்டது.

DIN

காங்கிரஸ் மத்திய தேர்தல் குழு ஆலோசனைக் கூட்டம் இன்று மாலை தில்லி தலைமையலுவலகத்தில் நடைபெற்றது.

மக்களவைத் தேர்தலில் போட்டியிடவுள்ள வேட்பாளர்கள் குறித்து இந்தக் கூட்டத்தில் ஆலோசிக்கப்பட்டது.

காங்கிரஸ் தலைவர் மல்லிகார்ஜுன கார்கே தலைமையில் நடைபெற்ற தேர்தல் குழு ஆலோசனைக் கூட்டத்தில், சோனியா காந்தி உள்ளிட்ட உறுப்பினர்கள் கலந்துகொண்டனர்.

மக்களவைத் தேர்தலுக்காக நடைபெறும் காங்கிரஸ் மத்திய தேர்தல் குழுவின் 2வது கூட்டம் இதுவாகும்.

மேற்கு வங்கத்தில் திரிணமூல் காங்கிரஸ் கட்சி சார்பில் மக்களவைத் தேர்தலில் போட்டியிடவுள்ள வேட்பாளர்கள் குறித்த அறிவிப்பு நேற்று வெளியானது. பாஜகவிலும் முதல்கட்டமாக 195 வேட்பாளர்கள் குறித்து அறிவிக்கப்பட்டுள்ளது.

மக்களவைத் தேர்தலையொட்டி கூட்டணி கட்சிகளுடன் காங்கிரஸ் கட்சி ஆலோசனை நடத்தி வரும் நிலையில், வேட்பாளர்கள் தேர்வு குறித்த ஆலோசனையிலும் காங்கிரஸ் தேர்தல் குழு ஈடுபட்டுள்ளது.

ஏற்கனவே கடந்த 8ஆம் தேதி வெளியான காங்கிரஸ் முதல் பட்டியலில் 39 வேட்பாளர்கள் அறிவிக்கப்பட்டிருந்தனர்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

வாக்காளா் பட்டியல் சிறப்பு திருத்தப் பணி! முதல் சவால் என்ன?

கவனம் ஈர்க்கும் மிடில் கிளாஸ் டீசர்!

மலரும் தீயும் வடகிழக்கு இந்தியப் பயணம்

ஜாய் கிரிசில்டா குழந்தைக்கு நான்தான் தந்தை!! ஒப்புக்கொண்ட மாதம்பட்டி ரங்கராஜ்

பாரதியின் காளி

SCROLL FOR NEXT