உள்நாட்டிலேயே தயாரிக்கப்பட்ட அக்னி -5 ஏவுகணை சோதனை வெற்றிகரமாக நிகழ்த்தப்பட்டது.
இதனையொட்டி பாதுகாப்பு ஆராய்ச்சி மற்றும் வளர்ச்சி அமைப்பின் விஞ்ஞானிகளுக்கு பிரதமர் நரேந்திர மோடி சமூகவலைதளத்தில் பாராட்டு தெரிவித்துள்ளார்.
பல்வேறு திறன் கொண்ட இலக்குகளை துல்லியமாகவும் தனிச்சையாகவும் சென்று தாக்கக் கூடியது அக்னி - ஏவுகணை. மிஷன் திவ்யாஸ்திரா திட்டத்தின் கீழ் அக்னி -5 ஏவுகணையை விஞ்ஞானிகள் சோதனை செய்தனர்.
நவீன ஏவுலணை வெற்றிகரமாக சோதனை செய்யப்பட்டதாக எக்ஸ் தளத்தில் பிரதமர் நரேந்திர மோடி குறிப்பிட்டுள்ளார்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.