இந்தியா

தேர்தல் பத்திரங்கள்: அதிக நன்கொடை வழங்கிய நிறுவனங்கள்? பெற்ற கட்சிகள்!

இணையதள செய்திப்பிரிவு

தேர்தல் நன்கொடை பத்திரங்கள் குறித்த விவரங்களை இந்திய தேர்தல் ஆணையம் வியாழக்கிழமை தனது இணையதளத்தில் வெளியிட்டது.

இந்த பத்திரங்களை ஆய்வு செய்து மிக அதிக அளவில் தேர்தல் பத்திரங்கள் மூலம் நிதி பெற்றது பாஜக என வலைதளங்களில் விரிவான தகவல்கள் வெளியிடப்பட்டு வருகின்றன. ஒட்டுமொத்தமாக பாஜக ரூ.11,562 கோடி நன்கொடையாகப் பெற்றுள்ளது.

ரூ.3214.7 கோடி உடன் திரிணமூல் காங்கிரஸ், ரூ. 2818.4 கோடி உடன் காங்கிரஸ் கட்சிகள் அதற்கு அடுத்தடுத்த நிலைகளில் நன்கொடைகளைப் பெற்றுள்ளன.

அதிக நன்கொடை வழங்கிய நிறுவனங்களில் லாட்டரி மார்டின் தொடர்புடையதாக கூறப்படும் பியூச்சர் கேமிங் அ்ன்ட் ஹோட்டல் சர்வீசஸ் அதிகபட்சமாக ரூ.1,368 கோடியை தேர்தல் நன்கொடையாக வழங்கியுள்ளது.

மார்டின் தொடர்புடைய நிறுவனத்தின் மீது அமலாக்கத்துறை நோட்டீஸ் அனுப்பியதாகவும் பின்னர் அது வாபஸ் பெறப்பட்டதற்கு காரணம் இந்த நன்கொடைகள்தான் எனவும் கூறப்படுகிறது.

மேகா இன்ஜினியரீங் மற்றும் இன்ப்ராஸ்ட்ரெக்‌ஷர் நிறுவனம் ரூ.980 கோடி தேர்தல் நன்கொடை வழங்கியுள்ளது.

இந்த நிறுவனம், தெலங்கானாவில் காலேஸ்வரம் இறவை நீர்ப்பாசனத் திட்டத்தை இதன் மூலம் பெற்றதெனவும், அதற்காக இந்த பணம் கொடுக்கப்பட்டிருக்கலாம் எனவும் கூறப்படுகிறது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

4-ஆம் கட்ட மக்களவைத் தேர்தல்: 9 மணி நிலவரம்!

ஜெய்ப்பூர் பள்ளிகளுக்கு வெடிகுண்டு மிரட்டல்

அடுத்த 5 ஆண்டுகளுக்கான முக்கியமான நாள்: வாக்களித்த பின் அல்லு அர்ஜுன் பேட்டி

புதிதாக வந்திருக்கும் ஸ்க்ராட்ச் கார்டு மோசடி: ரூ.18 லட்சம் இழந்த பெண்

நாகை எம்பி எம். செல்வராசு மறைவு: முதல்வர் இரங்கல்

SCROLL FOR NEXT