பிகார் முன்னாள் முதல்வர் லாலு பிரசாத் யாதவ்வின் மூத்த மகன் தேஜ் பிரதாப் யாதவ் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.
பிகாரில் ‘மகாபந்தன்’ ஆட்சியில் சுற்றுச்சூழல் அமைச்சராக இருந்தவர் தேஜ் பிரதாப் யாதவ்(36). லாலுவின் மூத்த மகனான இவர் நேற்று பக்சர் பகுதியில் பொது நூலகம் ஒன்றை திறந்து வைத்தார்.
இந்த நிலையில் அவருக்கு இன்று திடீரென குறைந்த ரத்த அழுத்தம் மற்றும் நெஞ்சுவலி ஏற்பட்டுள்ளது.
இதையடுத்து தேஜ் பிரதாப் யாதவ் பாட்னாவின் ராஜேந்திர நகரில் உள்ள தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகிறார்.
கடந்த 9 மாதங்களில் தேஜ் பிரதாப் உடல்நலக் குறைவு காரணமாக மருத்துவமனையில் அனுமதிக்கப்படுவது இது இரண்டாவது முறையாகும்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.