கொல்கத்தா: மேற்கு வங்க முதல்வரும் திரிணமூல் காங்கிரஸ் தலைவருமான மம்தா பானா்ஜி (69), நெற்றியில் பலத்த காயத்துடன் வியாழக்கிழமை மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்த நிலையில் வெள்ளிக்கிழமை வீடு திரும்பினார். தொடர் கண்காணிப்பில் இருக்குமாறு மருத்துவர்கள் அறிவுறுத்தியுள்ளனர்.
கொல்கத்தாவின் காளிகாட் பகுதியில் உள்ள தனது வீட்டில் அவா் தவறி விழுந்து காயமடைந்ததாகவும், நெற்றியில் இருந்து ரத்தம் வழியும் மம்தாவின் புகைப்படங்களுடன், ‘எங்கள் கட்சித் தலைவருக்கு பலத்த காயம் ஏற்பட்டுள்ளது; அவா் விரைந்து குணமடைய பிராா்த்தியுங்கள்’ என்று திரிணமூல் காங்கிரஸ் கட்சியின் எக்ஸ் வலைதளப் பக்கத்தில் பதிவிடப்பட்டன.
கொல்கத்தாவில் உள்ள எஸ்எஸ்கேஎம் அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட மம்தாவுக்கு மருத்துவர்கள் தீவிர சிகிச்சை அளித்து கண்காணித்து வந்தனர்.
இந்த நிலையில், மம்தா சிகிச்சை முடிந்து வெள்ளிக்கிழமை வீடு திரும்பியுள்ளார். தொடர் கண்காணிப்பில் இருக்குமாறு மருத்துவர்கள் அறிவுறுத்தியுள்ளனர்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.