கோப்புப் படம் IANS
இந்தியா

பாக். ஹிந்துகள் 6 பேருக்கு இந்திய குடியுரிமை!

பாகிஸ்தானிலிருந்து புலம்பெயர்ந்த 6 ஹிந்துகளுக்கு இந்தியா குடியுரிமை அளித்துள்ளது.

DIN

பாகிஸ்தானில் இருந்து புலம்பெயர்ந்து இந்தியா வந்த 6 ஹிந்துகளுக்கு இந்திய குடியுரிமை வெள்ளிக்கிழமை வழங்கப்பட்டுள்ளது.

ராஜஸ்தானில் 2010-ல் புலம்பெயர்ந்த பிரேம்லதா, சஞ்சய் ராம், பெஜல், ஜஜ்ராஜ், கெகு மை மற்றும் கோமந்த ராம் ஆகியோருக்கு குடியுரிமை சான்றிதழை கூடுதல் மாவட்ட ஆட்சியர் ஷஃபாலி குஷ்வாஹா வழங்கினார்.

பாகிஸ்தான் கராச்சியில் இருந்து இடம்பெயர்ந்த பிரேம்லதா (41), “இந்தியாவுக்கு திரும்பிய பின்னர்தான் நாங்கள் சுதந்திரத்தை உணர்கிறோம்” என தெரிவித்துள்ளார்.

சஞ்சய் ராம், “நான் 10 ஆண்டுகளாக குடியுரிமை பெற முயற்சித்து வருகிறேன். இப்போதுதான் பல ஆண்டுகளுக்கு பிறகு அது சாத்தியமாகியுள்ளது” என தெரிவித்தார்.

மாவட்ட நிர்வாகம் குடியுரிமை விண்ணப்பங்களை விதிகளின் அடிப்படையில் முன்னுரிமை வழங்கி பரிசீலித்து வருகிறது. தகுதியுடைய 319 பேருக்கு குடியுரிமை சான்றிதழ் வழங்கப்பட்டது என கூடுதல் ஆட்சியர் தெரிவித்தார்

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

ஏற்றுமதியாளா்களுடன் பிரதமா் மோடி ஆலோசனை

தமிழ் வளா்ச்சித் துறை போட்டிகளில் வென்ற மாணவா்களுக்கு பரிசளிப்பு

கானாடுகாத்தான் பகுதியில் நவ.7-இல் மின் தடை

ஊழல் குற்றச்சாட்டுகளை திசை திருப்பவே எஸ்ஐஆா் விவகாரத்தை திமுக கையில் எடுத்துள்ளது: மத்திய இணையமைச்சா் எல்.முருகன்

கணினி தரவு பதிவாளா் பணிக்கு விண்ணப்பிக்கலாம்

SCROLL FOR NEXT