இந்தியா

தேர்தல் ஆணையம் முன் 4 சவால்கள்: ராஜீவ் குமார்

தேர்தல் ஆணையம் முன் 4 சவால்கள் இருப்பதாக ராஜீவ் குமார் தெரிவித்துள்ளார்.

இணையதளச் செய்திப் பிரிவு

மக்களவைத் தேர்தல் தேதி அறிவிப்புக்கான செய்தியாளர் சந்திப்பில், மக்களவைத் தேர்தலுக்கு தேர்தல் ஆணையம் முன் இருக்கும் 4 சவால்கள் குறித்து தலைமை தேர்தல் ஆணையர் கூறினார்.

புது தில்லியில் தேர்தல் ஆணையக அலுவலகத்தில் இன்று தலைமைத் தேர்தல் ஆணையர் மற்றும் புதிதாக தேர்வாக தேர்தல் ஆணையர்கள் கூட்டாக செய்தியாளர்களை சந்தித்தனர்.

அப்போது பேசிய ராஜீவ் குமார், தேர்தல் ஆணையத்தின் முன்பு நான்கு சவால்கள் காத்திருக்கின்றன. அவை, பண பலம், ஆள் பலம், வதந்திகள், விதிமீறல்கள் ஆகியவை என்று கூறினார்.

இதனைத் தடுக்க ட்ரோன் மூலம் சர்வதேச எல்லைகள் கண்காணிக்கப்படும். நாடு முழுவதும் உள்ள சோதனைச் சாவடிகள் சோதனைக்கு உள்ளாக்கப்படும். வேட்பாளர்கள் விவரங்களை செயலியில் தெரிந்துகொள்ள நடவடிக்கை எடுக்கப்படும். நாடு முழுவதும் தற்காலிக சோதனைச் சாவடிகள் அமைக்கப்படும் என்று கூறினார்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

மேட்டூரில் ஆடிப்பெருக்கு பாதுகாப்பு பணிகள் தீவிரம்

ஏரியில் மூழ்கிய தொழிலாளியை தேடும் பணி தீவிரம்

சாலையில் கிடந்த கைப்பேசியை போலீஸில் ஒப்படைத்த இளைஞா்!

தேசிய மோட்டாா் பைக் பந்தயம்: சா்தக், ஜகதீஸ்வரி சிறப்பிடம்

ஏற்காட்டில் சுற்றுலாப் பயணிகள் வருகை அதிகரிப்பு!

SCROLL FOR NEXT