முகப்பு
இந்தியா

தேர்தலை எதிர்கொள்ள பாஜக கூட்டணி தயார்: பிரதமர் மோடி

Updated On : 16 மார்ச், 2024 at 2:15 PM
பகிர்:

மக்களவைத் தேர்தலை எதிர்கொள்ள பாஜக கூட்டணி தயாராகவிருப்பதாக பிரதமர் மோடி தெரிவித்துள்ளார்.

நடப்பு 17-ஆவது மக்களவையின் பதவிக் காலம் வரும் ஜூன் 16-ஆம் தேதி நிறைவடைகிறது. அதற்கு முன்பாக, 18-ஆவது மக்களவை தோ்வு செய்யப்பட வேண்டும். இதற்கான தோ்தல் ஏப்ரல்-மே மாதங்களில் நடைபெறும் என எதிா்பாா்க்கப்பட்டது.

இந்த நிலையில் தில்லியில் சனிக்கிழமை பிற்பகல் 3 மணியளவில் நடைபெற்ற பத்திரிகையாளா் சந்திப்பில் மக்களவைத் தோ்தல் மற்றும் 4 மாநில பேரவைத் தோ்தல்களுக்கான அட்டவணை மற்றும் தமிழ்நாட்டில் விளவங்கோடு பேரவை தொகுதிக்கும் வாக்குப்பதிவு நடைபெறும் தேதிகளை தலைமைத் தேர்தல் ஆணையர் ராஜீவ்குமார் அறிவித்தார்.

அதன்படி, நாடு முழுவதும் ஏப்ரல் 19 முதல் ஜூன் 1 ஆம் தேதி வரை 7 கட்டங்களாக தேர்தல் நடத்தப்பட்டு, ஜூன் 4 ஆம் தேதி வாக்கு எண்ணிக்கை நடத்தப்பட்டு முடிவுகள் அறிவிக்கப்படும். மக்களவைத் தேர்தல் ஏப்ரல் 19, 26, மே 7, 13, 20, 25 மற்றும் ஜூன் 1 என 7 கட்டங்களாக நடைபெறுகிறது. இந்த நிலையில் மக்களவைத் தேர்தலை எதிர்கொள்ள பாஜக கூட்டணி தயாராகவிருப்பதாக பிரதமர் மோடி தெரிவித்துள்ளார்.

இதுகுறித்து அவர் தனது எக்ஸ் தளப் பதிவில், ஜனநாயகத்தின் மிகப்பெரிய திருவிழா தொடங்கியுள்ளது. மக்களவைத் தேர்தல் தேதிகளை தேர்தல் ஆணையம் அறிவித்துள்ள நிலையில், தேர்தலில் போட்டியிட பாஜக-தேசிய ஜனநாயக் கூட்டணி முழுமையாக தயாராக உள்ளது. 140 கோடி இந்தியர்களால் இயக்கப்படும் நமது நாடு வளர்ச்சியில் புதிய சாதனைகளை படைத்து வருகிறது.

ஐந்தாவது பெரிய பொருளாதாரமாக மாறியுள்ளோம், கோடிக்கணக்கான மக்கள் வறுமையில் இருந்து விடுவித்துள்ளோம்.

எங்களின் திட்டங்கள் இந்தியாவின் அனைத்துப் பகுதிகளையும் சென்றடைந்துள்ளன. 140 கோடி மக்கள் மற்றும் 96 கோடி வாக்காளர்களின் முழு அன்பையும், ஆசிகளையும் தொடர்ந்து 3வது முறையாக பெறுவோம் என்ற முழு நம்பிக்கை உள்ளது. இவ்வாறு அவர் குறிப்பிட்டுள்ளார்.

முழு கட்டுரையைப் படிக்க →